கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினி கிடந்து இறந்தவர்களின் மேலும் 26 உடல்கள் கண்டெடுப்பு: கென்யாவில் சோகம் 0
கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட மொத்த உடல்களின் எண்ணிக்கை 47 ஆக அதிகரித்துள்ளது. “ஷகாஹோலா காட்டில் மொத்தம் 47 பேர் இறந்துள்ளனர்” என புலனாய்வாளர் ஒருவர் – ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.