மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம்

மனித உரிமை மீறல் தொடர்பிலான விசாரணைக் குழுக்கள் தொடர்பில் ஆராய, புதிய குழு நியமனம் 0

🕔22.Jan 2021

மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க இதுவரை நியமிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் ஆணைக்குழுக்கள் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளனவா என்பது குறித்து விசாரிக்க ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ – மூவரடங்கிய விசாரணைக் குழுவொன்றை நியமித்துள்ளார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எச்.எம். நவாஸ் தலைமையிலான குறித்த விசாரணைக் குழு இம்மாதம் 20 ஆம் திகதி முதல் செயற்படும் வகையில்

மேலும்...
பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பியவருக்கு, 06 ஆண்டுகள் கடூழிய சிறை: நீதிமன்றம் தீர்ப்பு 0

🕔21.Jan 2021

பொது சுகாதார பரிசோதகர்கள் மீது எச்சில் துப்பிய கொரோனா தொற்றாளருக்கு 06 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டணை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் தலா இரண்டு ஆண்டுகள் வீதம் இவ்வாறு 06 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாணந்துறை நீதவான் நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம்

மேலும்...
கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து

கொவிட் தடுப்பூசி தயாரிக்கும், இந்தியாவின் ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் தீ விபத்து 0

🕔21.Jan 2021

இந்தியாவின் மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான, ‘புனே’யிலுள்ள ‘சீரம் இன்ஸ்டிட்யூட்’ நிறுவனத்தில் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இங்குதான் கொரோனா தொற்றுக்கு எதிரான ‘கொவிஷீல்ட்’ தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ள கட்டடத்தில் தற்போது தடுப்பூசி தயாரிப்புப் பணிகள் தொடங்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது. இத்தீவிபத்து அந்நிறுவனத்தின் புதிதாக கட்டப்பட்ட நிர்வாக கட்டடத்தில்தான்

மேலும்...
நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை

நீதிபதி கிஹான் பிலபிட்டியவை, மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ள நடவடிக்கை 0

🕔21.Jan 2021

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டியவை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் தொடர்பில் நடத்தப்பட்ட விசாரணைகளுக்கு அமையவே, மீண்டும் சேவையில் அமர்த்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அவரை மீண்டும் பணியில் அமர்த்துவது தொடர்பாக நீதி சேவை ஆணைக்குழு விரையில் கடிதம் மூலம் அறிவிக்கவுள்ளது. தற்போது கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ரஞ்சன்

மேலும்...
21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு

21 தேங்காய் திருடிய சந்தேக நபர், 02 லட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிப்பு 0

🕔21.Jan 2021

காலி புகையிரத நிலையத்துக்கு உரித்தான உத்தியோகபூர்வ வீட்டு வளவிலிருந்து தேங்காய் திருடிய குற்றச்சாட்டில் கைதாகி, நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நபரொருவர் 02 லட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். குறித்த வீட்டு வளவிலிருந்த மரங்களில் இருந்து 21 தேங்காய்களை சந்தேக நபர் திருடியதாக ‘லங்காதீப’ செய்தி வெளியிட்டுள்ளது. மேற்படி சந்தேக நபர் நேற்று புதன்கிழமை

மேலும்...
2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட்

2019க்கு முன்னர் பட்டம் பெற்றோரில், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில் நியமனத்தில் புறக்கணிப்பு: நாடாளுமன்றில் றிசாட் 0

🕔21.Jan 2021

“குறுகிய காலத்துக்குள் நிறைய வர்த்தமானிகளைக் கொண்டுவந்த பெருமையை தற்போதைய அரசாங்கம் பெறுகின்றது. ஆனால், வெளிவந்த எந்த வர்த்தமானிகளும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. பொருட்களின் விலையேற்றம் எகிறியுள்ளது. மக்கள் வாழ முடியாத துர்ப்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். எனவே, வர்த்தமானியில் குறிப்பிட்டதன் பிரகாரம், பொருட்களின் விலைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்திடமும், சம்பந்தப்பட்ட அமைச்சரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்” என, அகில இலங்கை

மேலும்...
அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்பு; ட்ரம்ப் பங்கேற்கவில்லை 0

🕔21.Jan 2021

அமெரிக்காவின் 46வது ஜனாதிபதியாக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் இலங்கை நேரப்படி நேற்று 10.30 மணியளவில் பதவியேற்றார். முன்னதாக அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றார் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு பாரம்பரிய வழக்கப்படி உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஜோன் ராபர்ட்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். வொஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற வளாகமாக கெப்பிட்டால்

மேலும்...
ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார்

ரஞ்சனுக்கு நியாயம் கிடைக்கும் வரை, கறுப்பு சால்வை அணியும் போராட்டம்; நாடாளுமன்றில் ஹரீன் ஆரம்பித்தார் 0

🕔20.Jan 2021

சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயகவுக்கு ஆதரவாக, இன்று ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெனாண்டோ கறுப்புச் சால்வை அணியும் போராட்டமொன்றை நாடாளுமன்றில் ஆரம்பித்தார். நாடாளுமன்ற அமர்வில் இன்று புதன்கிழமை ஹரீன் உரையாற்றுகையில்; ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நியாயம் வழங்கப்பட்டு, அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்வதற்கு அனுமதி வழங்கப்படும் வரை, கறுப்புச்

மேலும்...
ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பான, ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைகள் நிறைவு 0

🕔20.Jan 2021

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதனடிப்படையில் நேற்று செவ்வாய்கிழமை சாட்சி விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதல் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குற்றப்புலனாய்வு திணைக்கள பணிப்பாளராக கடமையாற்றிய ஷானி அபேசேகர நேற்று சாட்சி வழங்க வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அவர் அதற்கு சமூகமளித்திருக்கவில்லை. எதிர்வரும் சில தினங்களில்

மேலும்...
புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம்

புத்தளத்தில் வாழ்ந்து கொண்டு, மன்னாரில் வாக்களிக்க முடியாது: தேர்தல் ஆணையாளர் திட்டவட்டம் 0

🕔19.Jan 2021

– அஷ்ரப் ஏ சமத் – புத்தளத்தில் வாழ்பவர்கள் அந்த மாவட்டத்திலேயே வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும். அவா்கள் அங்கு வாழ்ந்து கொண்டு மன்னாரில் வாக்காளர்களாக பதிய முடியாது என, தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்தார். சுயாதீன தோ்தல் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா , ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் மற்றும் தோ்தல்

மேலும்...
நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம்

நிவாரணப் பொருட்களை வழங்கிய கடை உரிமையாளரிடம், அட்டாளைச்சேனை பிரதேச செயலக அதிகாரி 02 லட்சம் ரூபா லஞ்சம் பெற்றமை அம்பலம் 0

🕔19.Jan 2021

– அஹமட் – தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினர் பொருட்களை கொள்வனவு செய்த கடை உரிமையாளர் ஒருவரிடமிருந்து , அந்த செயலகத்தின் அதிகாரியொருவர் 02 லட்சம் ரூபாவை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டமை பற்றிய தகவல் ‘புதிது’ செய்தித்தளத்துக்கு கிடைத்துள்ளது. கொவிட் தொற்று காரணமாக அட்டாளைச்சேனை பிரதேசத்துக்குட்பட்ட பகுதிகள் அண்மையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தன. இந்த

மேலும்...
லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது

லஞ்சம் வாங்கிய கிராம உத்தியோகத்தர் கைது 0

🕔19.Jan 2021

நபரொருவரிடமிருந்து லஞ்சம் பெற்ற கிராம உத்தியோகத்தர் ஒருவர், லஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். லுனுகம்வெஹர 64 – சிங்கபுர கிராம உத்தியோகத்தரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். 25 ஆயிரம் ரூபாவை நபரொருவரிடமிருந்து பெற்றுக் கொண்ட போது இவர் கைதானார். வீரவில பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் செய்த முறைப்பாட்டை அடுத்து, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

மேலும்...
பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர்

பிரதேச சபை எதிர்க்கட்சித் தலைவரை அறைந்த குற்றச்சாட்டில், உறுப்பினர் கைது: இருவரும் ஒரே கட்சியினர் 0

🕔19.Jan 2021

மிஹிந்தலை பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் இந்திக்க ருக்ஷான், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சபையின் எதிர்க்கட்சித் தலைவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் அவர் இன்று கைதானார். இன்றைய தினம் பிரதேச சபைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, எதிர்க்கட்சித் தலைவர் நிஸார் முகம்மட் என்பவரை, உறுப்பினர் இந்திக்க ருக்ஷான் அறைந்து தாக்கினார். தாக்குதலுக்குள்ளானவரும்

மேலும்...
ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர்

ரஞ்சனின் நாடாளுமன்ற பதவி தொடர்பில் பதிலளிக்க 03 வாரங்கள்; அவகாசம் கோரினார் சபாநாயகர் 0

🕔19.Jan 2021

சிறை தண்டனை விதிக்கப்பட்ட ரஞ்சன் ராமநாயக்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி தொடர்பில் பதில் வழங்குவதற்கு 03 வார கால அவகாசத்தை, சபநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கோரியுள்ளார். இன்று (19) கூடிய நாடாளுமன்ற அமர்வின் போது, ரஞ்சன் ராமநாயக்கவின் உறுப்புரிமை விவகாரம் தொடர்பில் சபையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதற்கு பதிலளித்து உரையாற்றும் போதே,

மேலும்...
வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர்  நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு

வாக்காளர் டாப்பிலிருந்து பெருந்தொகையானோர் நீக்கப்பட்ட விவகாரம்: மனித உரிமை ஆணைக்குழுவில் றிசாட் முறைப்பாடு 0

🕔19.Jan 2021

மன்னார் வாக்காளர் டாப்பிலிருந்து 7727 வாக்காளர்கள் நீக்கப்பட்டமை தொடர்பில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார். ஏற்கனவே, இந்த விடயம் குறித்து 15.01.2021ஆம் திகதி, தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி, வாக்காளர்களின் வாக்களிப்பு உரிமையை பெற்றுத்தருமாறு வேண்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட மாகாணத்தின் மன்னார்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்