சரத்பொன்சேகாவின் அமைச்சு அலுவலகம்; 702 மில்லியன் ரூபாய் வாடகை

சரத்பொன்சேகாவின் அமைச்சு அலுவலகம்; 702 மில்லியன் ரூபாய் வாடகை 0

🕔2.Jun 2018

பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் கீழுள்ள பிராந்திய அபிவிருத்தி மற்றும் வனவிலங்குத் துறை  அமைச்சுக்கான அலுவலகத்துக்காக, தனியார் கட்டடமொன்றினை 702 மில்லியன் ரூபாவுக்குக் குத்தகை அடிப்படையில் பெற்றுள்ளதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. மாதமொன்றுக்கு 11.7 மில்லியன் (01 கோடியே 17 லட்சம்) ரூபாய் எனும் அடிப்படையில் 05 வருடங்களுக்கு மேற்படி கட்டடம் குத்தகைக்குப் பெறப்பட்டுள்ளது. தனியார்

மேலும்...
முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த

முஸ்லிம்களின் எதிரியாக என்னை கூறினீர்களே, இப்போது என்ன நடக்கிறது: ஹக்கீடம் கேட்ட மஹிந்த 0

🕔1.Jun 2018

– ஏ.எச்.எம். பூமுதீன் – மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாடு செய்திருந்த நோன்பு துறக்கும் (இப்தார்) நிகழ்வு நேற்று வியாழக்கிழமை அவருடைய கொழும்பு வாசஸ்தலத்தில் இடம்பெற்றது. 500 பேருக்கு மட்டும் அழைப்பிதழ் வழங்கப்பட்டிருந்த போதிலும் சுமார் 750 பேர் வரை கலந்து கொண்டிருந்தனர். அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ஏ.எச்,எம்.பௌஸி, ஹிஸ்புள்ளாஹ் , முன்னாள் அமைச்சர் அதாவுள்ளா உட்பட

மேலும்...
மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு

மைத்திரி நன்றி மறந்து விட்டார்; அமைச்சர் ஹரீன் குத்தல் பேச்சு 0

🕔1.Jun 2018

மைத்திரிபால சிறிசேன நன்றி மறந்து விட்டார் எனும் அர்த்தத்தில், ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடக மற்றும் தொடர்பாடல் துறை பிரதானியும் அமைச்சருமான ஹரீன் பெணான்டோ குத்தல் தனமான கருத்தொன்றினை வெளியிட்டுள்ளார். “சாதாரண குடும்பத்தை சேர்ந்தவர்களை ஜனாதிபதியாக்கியது ஐக்கிய தேசியக் கட்சியாகும். எனினும் தற்போது அதனை ஒரு சிலர் மறந்துவிட்டனர். அதனை நாம் மீண்டும் நினைவூட்டுவதற்கு சத்தியத்துடன் களமிறங்கவுள்ளோம்”

மேலும்...
அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு

அர்ஜுன் அலோசியஸ், கசுன் பலிசேன ஆகியோரின் பிணை மனு நிராகரிப்பு 0

🕔1.Jun 2018

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள  பேர்பெச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன உரிமையாளரான அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுமாறு முன்வைக்கப்பட்ட மனு நிராகரிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்ற தலைவர் பிரீதி பத்மன் சுரசேன மற்றும் சிரான் குணரத்தன முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை இந்த விடயம் விவாதத்திற்கு

மேலும்...
அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர்

அமைச்சர் றிசாட் பதியுதீனிடம் சீனி நிறுவனத்தை கையளியுங்கள்; ஜனாதிபதிக்கு தொழிற்சங்கங்கள் மகஜர் 0

🕔1.Jun 2018

பாரிய நஷ்டத்தில் இயங்கிக்கொண்டிருந்த இலங்கை சீனி நிறுவனத்தை லாபமீட்டச் செய்த அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடமிருந்து, அந்த நிறுவனத்தை வேறொரு அமைச்சரின் கீழ் கொண்டு வந்தமையின் நோக்கம் என்னவென்று இலங்கை சீனி நிறுவனத்தின் தொழிற்சங்கங்கள் கேள்வியெழுப்பியுள்ளன. தற்போது இந்த நிறுவனம் கையளிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட அமைச்சரின் கீழ்தான், ஏற்கனவே 100 நாள் அரசாங்கத்திலும் இந்த நிறுவனம் இருந்தது. ஆனால்

மேலும்...
மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் பங்கேற்பு; 03 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்க கலந்துரையாடல்

மஹிந்தவின் இப்தார் நிகழ்வில் ஹக்கீம் பங்கேற்பு; 03 வருடங்களுக்குப் பின்னர் பகிரங்க கலந்துரையாடல் 0

🕔1.Jun 2018

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். மஹிந்த ராஜபக்ஷ நேற்று வியாழக்கிழமை ஏற்பாடு செய்திருந்த இப்தார் நிகழ்வில் ஹக்கீம் கலந்து கொண்ட போதே, இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் கொழும்பிலுள்ள உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற

மேலும்...
கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு

கிழக்கு ஆளுநரின் மனைவி, மகளை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவு 0

🕔1.Jun 2018

கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவின் மனைவி மற்றும் மகள் ஆகியோரைக் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கொழும்பு நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளது. மேற்படி இருவரையும் கைது செய்து நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு, இதன்போது நீதிவான் உத்தரவிட்டார். பெண் ஒருவரைத் தாக்க முயற்சித்தமை தொடர்பான வழக்கில், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்