கழுதைக்கு கரட், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலா; ஹக்கீமிடம் கேட்பதற்கு, காத்திருக்கும் இளைஞர்கள்

கழுதைக்கு கரட், அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியலா; ஹக்கீமிடம் கேட்பதற்கு, காத்திருக்கும் இளைஞர்கள் 0

🕔26.Aug 2017

– அஹமட் – அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி வழங்குவதாக வாக்குறுதியளித்து விட்டு, கடந்த இரண்டு வருட காலமாக ஏமாற்றி வரும் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம்; நாளை ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை வரவுள்ளார். இந்த நிலையில்,தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை தமது பிரதேசத்துக்கு வழங்குவதாக, மூன்று பொதுத் தேர்தல்களில் வாக்குறுதி வழங்கி விட்டு,

மேலும்...
டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்

டிசம்பரில் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் 0

🕔26.Aug 2017

உள்ளுராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டம் அமுலாக்கப்பட்டமையினை அடுத்து, அனைத்து உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களையும், இவ்வருடம் டிசம்பர் மாதம் க.பொ.த. சாதாரணதர பரீட்சை நடைபெறுவதற்கு முன்னதாக நடத்த முடியும் என நம்பப்படுகிறது. இரண்டு வருடங்களுக்கு மேல் நடத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்களை, இவ்வருடம் டிசம்பர் மாதம் அல்லது அடுத்த வருடம் ஜனவரி மாதமளவில்

மேலும்...
மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில்

மாகாண சபைத் தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியில் போட்டிடுவோம்; ஐ.தே.க. தவிர, யாரும் எம்முடன் இணையலாம்: பசில் 0

🕔26.Aug 2017

எதிர்வரும் மாகாணசபை தேர்தல்களில் தாங்கள் ‘ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன’ கட்சியில் போட்டியிடவுள்ளதாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அதேவேளை, ஐ.தே.கட்சி தவிர ஏனைய எந்தக் கட்சியும் தம்முடன் இணைந்து கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார். மாகாணசபை தேர்தல்களுக்காக முன்மொழியப்பட்டுள்ள சட்ட மூலமானது,

மேலும்...
ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ

ராஜிதவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை அவசிமானது: மஹிந்த ராஜபக்ஷ 0

🕔25.Aug 2017

அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிரணியினர் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையானது, பொருத்தமானதொரு நடவடிக்கையாகும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்களிடம் இன்று வெள்ளிக்கிழமை பேசும் போதே, மேற்கண்ட விடயத்தினை அவர் கூறினார். தற்போதைய காலகட்டத்தில், அமைச்சர் ராஜிதவுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை அவசியமானது எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும்...
க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம்

க.பொ.த. உயர்தர பொது அறிவுப் பரீட்சை 04ஆம் திகதிக்கு மாற்றம் 0

🕔25.Aug 2017

க.பொ.த உயர்தர, பொது அறிவுப் பரீட்சையை எதிர் வரும் 04ம் திகதி திங்கட் கிழமை நடத்துவதென தற்போது தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. மேற்படி பாடத்துக்குரிய பரீட்சை 02ஆம் திகதி நடைபெறும் என அட்டவணைப் படுத்தப்பட்டிருந்த போதிலும், 02ஆம் திகதி ஹஜ் பெருநாள் தினமாகையினால், குறித்த பாடத்துக்கான பரீட்சையை 03ஆம் திகதி நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்தது. ஆயினும்,

மேலும்...
கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளனவாம்; இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக ஹக்கீம் கருத்து

கடவுளால் தீர்க்க முடியாத பிரச்சினைகளும் உள்ளனவாம்; இஸ்லாமிய நம்பிக்கைக்கு முரணாக ஹக்கீம் கருத்து 0

🕔25.Aug 2017

கடவுள் நேரில் வந்தாலும் அரசாங்க கட்சிகளிடையே காணப்படும் முரண்பாடுகளை  தீர்க்க முடியாது என்று, மு.கா. தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தெரிவித்தார். கடுவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அமைச்சர் ஹக்கீம் இதனைக் கூறினார். இக்கூட்டத்தில் ஐ.தே.கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சுஜீவ சேனசிங்க, சிறிலங்கா சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும்

மேலும்...
உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம்

உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்ட மூலம் நிறைவேற்றம் 0

🕔25.Aug 2017

உள்ளூராட்சி மன்ற தேர்தல் திருத்தச் சட்டமூலம், இன்று வெள்ளிக்கிழமை நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலத்திற்கு ஆதரவாக 120 வாக்குகள் கிடைத்தன.  44 பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. அந்த வகையில், இச் சட்ட மூலத்துக்கு எதிராக எந்தவொரு வாக்கும் அளிக்கப்படவில்லை. முன்னதாக குறித்த சட்டமூலம் தொடர்பில் தினேஷ் குணவர்தன முன்வைத்த திருத்தங்கள் மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்ட

மேலும்...
நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம்

நீதியமைச்சராக தலதா, புத்தசாசன அமைச்சராக காமினி ஆகியோர் நியனம் 0

🕔25.Aug 2017

நீதியமைச்சராக தலதா அத்துகோரல மற்றும் புத்தசாசன அமைச்சராக காமினி ஜனவிக்ரம பெரேரா ஆகியோர் இன்று வெள்ளிக்கிழமை  ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெனாண்டோ ஆகியோரும் கலந்து கொண்டனர்.விஜயதாஸ ராஜபக்‌ஷ அமைச்சுப் பதவியில் இருந்து நீக்கப்பட்டதன் பின்னர்,

மேலும்...
மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி 0

🕔24.Aug 2017

– மப்றூக் – அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது. அனைத்து மாகாண

மேலும்...
சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்

சமூக ஊடகம் தொடர்பிலான பயிற்சி முகாம்; ஆர்வமுள்ளோர் விண்ணப்பிக்கலாம் 0

🕔24.Aug 2017

சமூக ஊடகங்களில் ஆர்வம் உள்ளவர்களின் திறனை மேம்படுத்தும் நோக்கிலும், வினைத்திறனான பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம், முழு நாள் பயிற்சி முகாம் ஒன்றை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பில் நடத்த திட்டமிட்டுள்ளது. ‘தாக்கம் செலுத்தக் கூடிய வகையில் சமூக ஊடகத்தை எப்படிப் பயன்படுத்தலாம்’ என்ற தலைப்பிலான வழிகாட்டல்களும்

மேலும்...
அட்டாளைச்சேனையில் அபிவிருத்திப் பெருவிழா; மு.கா. தலைவர் கலந்துகொள்கிறார்

அட்டாளைச்சேனையில் அபிவிருத்திப் பெருவிழா; மு.கா. தலைவர் கலந்துகொள்கிறார் 0

🕔24.Aug 2017

– சப்னி அஹமட் – அட்டாளைச்சேனையில்  எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அபிவிருத்தி பெருவிழா எனும் மகுடத்தில் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்துள்ளார். இவ் விழாவில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர திட்டமிடல் நீர்வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன, கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகல்லாகம,

மேலும்...
உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன்

உயர்தரப் பரீட்சை அட்டவணையில் மாற்றம்: அமைச்சர் றிசாட் பதியுதீனின் கோரிக்கைக்கு பலன் 0

🕔24.Aug 2017

  க.பொ.த உயர்தர பரீட்சையின் பொது அறிவு பாட பரீட்சை, எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறுவதற்கு அட்டவணைப்படுத்தப் பட்டிருந்த நிலையில், அப் பரீட்சையினை 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். ஹஜ் பெருநாளினை எதிர்வரும் 02ஆம் திகதி முஸ்லிம்கள் கொண்டாடுவதால்,  அன்றை தினம் நடைபெறவிருந்த மேற்படி பாடத்துக்கான பரீட்சையை, பிற்போடுமாறு அமைச்சர் ரிஷாட் பதியுதீன், எழுத்து மூலம் விடுத்த வேண்டுகோளை ஏற்று, இந்த

மேலும்...
20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு

20ஆவது திருத்தத்துக்கு எதிராக, ஊவா வாக்களிப்பு 0

🕔24.Aug 2017

நாட்டிலுள்ள அனைத்து மாகாண சபைகளுக்கும் ஒரே தினத்தில் தேர்தல்களை நடத்துவதற்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியலமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்களிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாகாண சபைகளையும் ஒரே நாளில் நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தும் அரசியல் திருத்தத்துக்கு  எதிராக 12 வாக்குகளும், ஆதரவாக 05 வாக்குகளும் வழங்கப்பட்டன. எவ்வாறாயினும், வடமத்திய மாகாண

மேலும்...
தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம்

தேசியப்பட்டியலை மறக்கடிக்கும் ‘போதை’ மருந்துடன், அட்டாளைச்சேனை வருகிறார் ஹக்கீம் 0

🕔24.Aug 2017

– நவாஸ் – அட்டாளைச்சேனை பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளால், இதுவரையும் குறிப்பிட்டுச் சொல்லும் படியாக எந்தவித அபிவிருத்தி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை என்று, அந்தப் பிரதேச மக்கள் கடுமையான விசனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில், எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை  ‘அபிவிருத்திப் பெரு விழா’ எனும் பெயரில், மு.கா. தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்வொன்று

மேலும்...
வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ

வெட்கப்படுகிறேன்: விஜேதாஸ ராஜபக்ஷ 0

🕔24.Aug 2017

நாட்டினுடைய வளங்களை விற்பனை செய்யும் அமைச்சரவையில் இருந்தமை தொடர்பில், தான் வெட்கப்படுவதாக, முன்னாள் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். வரலாற்றில் ஏனைய நீதியமைச்சர்கள், நீதித்துறை மீது அழுத்தம் செழுத்தியதாகத்தான் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர். ஆனால், அவ்வாறு அழுத்தம் செலுத்தவில்லை என்பதே, தன் மீதான குற்றச்சாட்டாகும் எனவும் அவர் கூறினார். அமைச்சுப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பட்ட பின்னர்,நேற்று புதன்கிழமை

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்