இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு

இவர்கள் எங்களை துஸ்பிரயோகம் செய்யவில்லை; பாதிக்கப்பட்ட மாணவிகள் வாக்கு மூலம் வழங்கியதாக இம்ரான் எம்.பி. தெரிவிப்பு 0

🕔30.May 2017

தமிழர் மற்றும் முஸ்லிம்களிடையில் கலவரம் ஒன்றை ஏற்படுத்த கடந்த சில தினங்களாக சில தீய சக்திகள் திட்டமிட்டு  முயற்சித்து வருகின்றன என்று நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார். மூதூர் மல்லிகை தீவில் மூன்று தமிழ் மாணவிகளை முஸ்லிம் இளைஞர்கள் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக கூறி, அப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண நிலையின் உண்மை தன்மையினை அறிய

மேலும்...
பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது

பள்ளிவாசலும் ஒலிபெருக்கிகளும்; நிந்தவூர் உலமா சபை பின்னடிக்கக் கூடாது 0

🕔30.May 2017

– ஆசிரியர் கருத்து – பள்ளிவாசல்களில் தொழுவிப்பதையும், மார்க்க சொற்பொழிவு நடத்துவதையும் வெளியிலுள்ள ஒலிபெருக்கிகளில் உரத்த சத்தத்தில் ஒலிக்க விடுவது – ஒரு கலாசாரமாகவே மாறி விட்டது. ஒலிபெருக்கியில் அதிக சத்தம் வைத்து தொழுகை நடத்தவில்லையென்றால், அது அல்லாஹ்வை போய் சேராது என்கிற மடத்தமனமான மனநிலைக்குள் சிலர் தள்ளப்பட்டுக் கிடக்கின்றனரோ தெரியவில்லை. உரத்த சத்தத்தில் ஒலிபெருக்கியில்

மேலும்...
இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து

இலத்திரனியல் ரீதியாக கம்பனிகளை பதிவு செய்யும் திட்டத்துக்கான ஒப்பந்தம்; அமைச்சர் றிசாட் முன்னிலையில் கைச்சாத்து 0

🕔30.May 2017

இலங்கையின் வர்த்தக வரலாற்றில் முதல் தடவையாக கம்பனிகளை இலத்திரனியல் ரீதியாக தன்னியக்க முறையில் பதிவு செய்யும் திட்டமொன்றுக்கான ஒப்பந்தம் இன்று செவ்வாய்கிழமை, வர்த்தகம் மற்றும் கைத்தொழில் அமைச்சில், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் முன்னிலையில் கைச்சாத்திடப்பட்டது.கம்பனி பதிவாளர் திணைக்களத்துக்கும், கே.பி.எம்.ஜீ – ஸ்ரீலங்காவுக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்ட இந்த ஒப்பந்தம் தொடர்பான திட்டத்தை அமுல்ப டுத்த, 57மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

மேலும்...
புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு

புதினம் பார்க்கச் சென்ற 18 பேர் பலி: பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு 0

🕔30.May 2017

வெள்ளத்தினைப் பார்ப்பதற்காக அநா­வ­சி­ய­மான பய­ணங்­களை மேற்­கொண்ட 18 பேர் உயி­ரி­ழந்ததாக, பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார். அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலை­யத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­ம் போதே, அவர் இதனைக் கூறினார். பொலிஸ் ஊட­கப்­பேச்­சாளர் மேலும் தெரி­விக்­கையில்; “தற்­போது வெள்­ளத்தால் பாதிக்­கப்­பட்­டுள்ள பகு­தி­களில் 50 ஆயிரம்

மேலும்...
நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம்

நீர் கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் தப்பியோட்டம் 0

🕔30.May 2017

நீர்கொழும்பு சிறைச்சாலையிலிருந்து 04 கைதிகள் இன்று செவ்வாய்கிழமை காலை தப்பிச் சென்றுள்ளனர் என்று, சிறைச்சாலை பேச்சாளர் ரி.என். உபெல்தெனிய தெரிவித்துள்ளார். கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் மேற்படி நால்வரும் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையிலேயே இவர்கள் சிறையிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் இணைந்து, மேற்படி நபர்களைக் கைது

மேலும்...
காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல்

காலநிலை பாதிப்பினால் உயிரிழந்தோர் தொகை 183 ஆக அதிகரிப்பு: அனர்த்த முகாமைத்துவ நிலையம் தகவல் 0

🕔30.May 2017

வெள்ளம் மற்றும் மண் சரிவு ஆகிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை 183 பேர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் இன்று செவ்வாய்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, 103 பேர் காாணமல் போயுள்ளனர் எனவும் அந்த நிலையம் கூறியுள்ளது. இந்த அனர்த்தத்தினால் 112 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் 142,811 குடும்பங்களைச் சேர்ந்த 05 லட்சத்து 45 ஆயிரத்து 243

மேலும்...
அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம்

அமைச்சர்கள், எம்.பி.களுக்கான வாகன கொள்வனவை இடை நிறுத்த, ஜனாதிபதி தீர்மானம் 0

🕔30.May 2017

அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகனக் கொள்வனவினை இடை நிறுத்துவதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்தத்தினை கவனத்திற் கொண்டு இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இன்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதே, இந்தத் தீர்மானத்தினை ஜனாதிபதி வெளியிட்டார். இந்த வருட இறுதிவரை, மேற்படி வாகனக் கொள்வனவினை இடைநிறுத்துவதென இதன்போது

மேலும்...
அக்கரப்பத்தனையில் மண்சரிவு; 20 பேர் பாதிப்பு

அக்கரப்பத்தனையில் மண்சரிவு; 20 பேர் பாதிப்பு 0

🕔30.May 2017

– க. கிஷாந்தன் – அக்கரப்பத்தனை ஹோல்புறூக் நியூ கொலனி பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை குடியிருப்பு பகுதியில் மண்சரிவு ஏற்பட்டதோடு, பாறைகளும் சரிந்து வீழ்ந்தன. இதனால் பாதிக்கப்பட்ட 05 குடும்பங்களைச் சேர்ந்த 20 பேர் ஹோல்புறூக் கிறிஸ்தவ தேவாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான உணவு மற்றும் தேவையான வசதிகளை கிராம அதிகாரி ஊடாக நுவரெலியா பிரதேச செயலகம்

மேலும்...
ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’

ரவியின் கன்னத்தில் மங்கள ‘இச்’ 0

🕔25.May 2017

அமைச்சர் ரவி கருணாநாயகவுக்கு மங்கள சமரவீர கன்னத்தில் முத்தம் கொடுத்து மகிழ்ந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை இடம்பெற்றது. வெளி விவகார அமைச்சராக ரவி கருணாநாயக்க, இன்று வியாழக்கிழமை கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டபோதே, அமைச்சர் மங்கள இவ்வாறு முத்தமிட்டார். வெளிவிவகார அமைச்சராக மங்கள முன்னர் கடமையாற்றியிருந்தார். இந்த நிலையில் மங்களவுக்கு வழங்கப்பட்டிருந்த வெளிவிவகார அமைச்சினை ரவி கருணாநாயகவுக்கும், ரவிக்கு

மேலும்...
நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு

நிதி மோசடி வழக்கு; மஹிந்தானந்த அளுக்கமகே பிணையில் விடுவிப்பு 0

🕔25.May 2017

நிதி மோசடி தொடர்பான வழக்கில் ஆஜரான முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குறித்த வழக்கு தொடர்பான குற்றப்பத்திரிகை தாக்கல் இன்று செய்யப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் அமைச்சராக பதவி வகித்த போது, நிதி பெற்றுக் கொண்டமைக்கான உரிய ஆவணங்களை வௌிப்படுத்தாமல், பொரளை – கின்ஸி வீதியில் சொகுசு வீடொன்றை கொள்வனவு

மேலும்...
சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம்

சம்பிக்க இருக்கும் வரை, ஞானசாரவை கைது செய்வது கடினம்: மஹிந்த ராஜபக்ஷ திட்டவட்டம் 0

🕔25.May 2017

நாட்டில் சகல மக்களினதும் அதிருப்தியையும் பெற்றுள்ள இந்த அரசாங்கம், செப்டம்பரில் காலாவதியாகும் மாகாணசபைகளுக்கான தேர்தலை பிற்போடுவதற்கு அவசர கால சட்டத்தை மீண்டும் கொண்டுவருவதை தவிர, வேறு வழிகள் இல்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ குறிப்பிட்டார்.நேற்று முன்தினம் அவருடைய இல்லத்தில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றில், கருத்து வெளியிட்டபோதே, இவ்வாறு கூறினார்.அங்கு அவர் மேலும் கூறுகையில்;“நாளுக்கு நாள் புகழ் இழந்து வரும் இந்த அரசாங்கம், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை சாக்கு போக்கு சொல்லி பிற்போட்டு வருகிறது. ஆனால், செப்டம்பரில் காலவதியாகும் மூன்று மாகாண சபைகளையும் அரசாங்கம் கலைத்து தேர்தலை அறிவிக்க வேண்டும்.ஆனால் அரசாங்கம் தேர்தலை எதிர்கொள்ளக் கூடியளவு உறுதியான நிலையில் இல்லை. மாகாணசபை அதிகாரத்தை நாம் கைப்பற்றி

மேலும்...
முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாகுதல் தொடர்பில், விமலின் ‘பைலா’

முஸ்லிம்கள் மீதான இனவாதத் தாகுதல் தொடர்பில், விமலின் ‘பைலா’ 0

🕔25.May 2017

– எம்.ஐ. முபாறக் –ஞானசாரவின் பிரசாரம் மற்றும் வர்த்தக நிலையங்கள்- பள்ளிவாசல்கள் மீதான தாக்குதல்கள் என்று முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் தொடர்வதை முழு நாடும் அறியும்.ஆனால், முஸ்லிம்கள் தாக்கப்படுவதை விரும்பும் கணிசமான சிங்கள ஊடகங்கள், இப்படியான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்றே காட்டிக்கொள்வதாக இல்லை. அப்படிக் காட்டினாலும் அதைப் பார்க்கும் மக்கள் அது இயற்கை அனர்த்தம் என்று

மேலும்...
ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம் 0

🕔25.May 2017

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டினார்.தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று புதக்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில்

மேலும்...
கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது

கல்முனை ஸாஹிராவின் அதிபராக மீண்டும் பதுறுதீன்; சர்ச்சைக்கு முடிவு கிட்டியது 0

🕔24.May 2017

– யூ.கே. காலித்தீன் – கல்முனை ஸாஹிரா கல்லூரி அதிபராக மீண்டும் பீ.எம்.எம். பதுறுதீன் நியமிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இவர் இன்று புதன்கிழமை தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக பாடசாலை சென்ற போது, அங்கு சர்ச்சையொன்று ஏற்பட்டது. அரச சேவைகள் ஆணைக்குழுவின் அனுமதியின் பிரகாரம் பீ.எம்.எம். பதுறுதீன்   இன்று புதன்கிழமை காலை, பாடசாலையில் கடமைகளை பொறுப்பேற்க சென்ற போது,

மேலும்...
இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு

இனவாதத்துக்கு மருந்து கட்டும் முயற்சியில் ஹிஸ்புல்லாஹ்; மொனராகல விகாரதிபதியுடன் பேச்சு 0

🕔24.May 2017

– ஆர். ஹஸன் –சிங்கள – முஸ்லிம் மக்களுக்கிடையில் இனநல்லிணக்கத்தை ஏற்படுத்துவது குறித்து ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், மொனராகல ரஜமஹா விகாரையின் பிரதம விகாராதிபதி சங்கைக்குரிய சந்திராலோக்க தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.நாட்டில் மீண்டும் தலைதூக்கியுள்ள இனவாத செயற்பாடுகளினால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழ்கின்ற முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பற்ற சூழலைத் தவிர்க்கும் வகையில்,

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்