ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது?

ஜோன்ஸ்டன், மஹிந்தானந்த விரைவில் கைது? 0

🕔25.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெனாண்டோ மற்றும் மஹிந்தானந்த அலுத்கமகே ஆகியோர் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. லங்கா சதொச நிறுவனத்தின் முக்கிய ஆவணங்களை எரித்தமை , அரச வாகனங்களை தனது நண்பர்களுக்கு வழங்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் ஜோன்ஸ்டன் பெனாண்டோ மீது பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆட்சிக் காலத்தில், இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகித்த காலப் பகுதிகளில்,

மேலும்...
கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம்

கட்சி நடத்த, பத்திரிகையாளர்கள் முற்படுகின்றனர்; மு.கா. தலைவர் ஹக்கீம் விசனம் 0

🕔25.Jul 2016

– முன்ஸிப் அஹமட் – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை நடத்துவதற்கு – பத்திரிகையாளர்கள் முற்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் விசனம் தெரிவித்தார். கலைக்கப்பட்ட உள்ளுராட்சி மன்றங்களின் மு.கா. பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டி – கட்டுகஸ்தோட்ட பிரதேசத்தில் அமைந்துள்ள தேசிய நீர் வழங்கல் அதிகார சபையின் கூட்ட

மேலும்...
குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு

குளங்களைப் புனரமைக்க 2000 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு 0

🕔24.Jul 2016

– றியாஸ் ஆதம் – மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நீர்ப்பாசன குளங்களை புனரமைப்பதற்காக 2000 மில்லியன் ரூபா நிதியினை, நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் விஜிதமுனி சொய்சா ஒதுக்கீடு செய்துள்ளார். மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி – உறுகாமம் பிரதேச நீர்ப்பாசன பொறியியலாளர் காரியாலத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை அமைச்சர் விஜயம் மேற்கொண்டார். இதன்போதே, இந்த ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின்

மேலும்...
குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம்

குடும்பச் சொத்தாகிறது மு.காங்கிரஸ்; செயலாளரின் அதிகாரங்கள் தலைவரின் மச்சானிடம் 0

🕔24.Jul 2016

– அஹமட் – முஸ்லிம் காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றுக்குரிய அழைப்புக் கடிதங்களை, மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமுடைய மச்சானும், கட்சியின் பிரதி தவிசாளருமான எம். நயீமுல்லா ஒப்பமிட்டு அனுப்பியுள்ளமையானது கட்சிக்குள் பல்வேறு கேள்விகளையும், கண்டனங்களையும் ஏற்படுத்தியுள்ளது. கலைக்கப்பட்ட உள்ளுராட்சி சபைகளில், முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக பிரதிநிதித்துவம் வகித்த முன்னாள் உறுப்பினர்களுக்கும் – மு.கா. தலைவருக்கும் இடையிலான

மேலும்...
சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம்

சமூக மாற்றத்தைக் கொண்டு வருவது, கடினமான விடயம்: உபவேந்தர் நாஜிம் 0

🕔24.Jul 2016

– எம்.வை. அமீர் – சமூக மாற்றத்தை கொண்டுவருவது என்பது மிகவும் கடினமான விடயம் என்பதை, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் பதவியேற்று ஒருவருடமும் ஒரு மாதமும் நிறைவடையும் இவ்வேளையில் – தான் உணர்வதாக, தென்கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜீம் தெரிவித்தார். கலாநிதி அபூபக்கர் றமீஸ் எழுதிய “சமூகவியல் சமூக மானிடவியல் அடிப்படை எண்ணக்கருக்கள்” எனும் நூல்

மேலும்...
முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது

முகத்தை மறைத்து பர்தா அணிந்து வந்த ஆண், பண்டாரநாயக்க விமான நிலையத்தில் கைது 0

🕔23.Jul 2016

முகத்தை மறைக்கும் வகையில் பர்தா அணிந்திருந்த ஆண் ஒருவர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பயணிகள் வந்திறங்கும் பகுதியில் வைத்து இன்று சனிக்கிழமை  காலை – இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் கொழும்பைச் சேர்ந்த முஸ்லிம் நபர் எனத் தெரியவருகிறது. பொலிஸாரிடம் இவர் கூறுகையில்; கட்டார் நாட்டிலிருந்து தனது காதலி, நாட்டுக்கு வருவதாகவும், அவரை

மேலும்...
சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை வலியுறுத்தி குத்பா மற்றும் விசேட பிரார்த்தனை 0

🕔22.Jul 2016

– அஸ்ஹர் இப்றாஹிம் – சாய்ந்தமருதுக்கான உள்ளூராட்சி மன்றத்தை வலியுத்தும் வகையிலும்,  அவ் விவகாரம் தொடர்பில் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கும் விதத்திலும் இன்று வெள்ளிக்கிழமை மாளிகைக்காடு மஸ்ஜிதுஸ் ஸாலிஹீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் குத்பா பிரசங்கம் நிகழ்த்தப்பட்டதோடு,  தொழுகையின் பின்னர் விசேட பிரார்த்தனையும் இடம்பெற்றது. சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்மா பள்ளிவாஸல் நம்பிக்கையாளர் சபைநிர்வாகிகளின் வேண்டுகோளின் பேரில், இந்த

மேலும்...
சமல்  விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு

சமல் விரும்பினால், ஜனாதிபதி வழங்குவார்; மஹிந்த தெரிவிப்பு 0

🕔22.Jul 2016

நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ விரும்வினால், அவருக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன – அமைச்சுப் பதவி வழங்குவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று வௌ்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறினார் சமல் ராஜபக்ஷ சிறந்த அரசியல் தலைவர்.

மேலும்...
டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து

டீசல் பௌசர் கவிழ்ந்து விபத்து 0

🕔22.Jul 2016

– க. கிஷாந்தன் – ஹப்புத்தளை மற்றும் பண்டாரவளை புகையிரத நிலையத்துக்கு அருகாமையில், கொழும்பு – பதுளை பிரதான வீதியில், டீசல் பௌசர் ஒன்று கவிழ்ந்து செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. இதன்போது காயமடைந்த பௌசர் வண்டியின் சாரதி, தியத்தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி பயணித்து கொண்டிருந்த டீசல் பௌசர் வண்டியே, இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும்...
பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி

பொதுபலசேனா மீது நடவடிக்கை எடுக்காமல், அரசு ஏன் பார்த்துக் கொண்டிருக்கிறது; லாஹிர் கேள்வி 0

🕔22.Jul 2016

– எப். முபாரக் – இனங்களுக்கிடையில் பிணக்குகளை ஏற்படுத்தும் பொதுபலசேனா அமைப்பு மீது எதுவித நடவடிக்கைகளும் மேற்கொள்ளாமல், ஏன் இந்த அரசு பார்த்துக் கொண்ருக்கிறது  என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம். லாஹிர் கேள்வியெழுப்பினார். கிழக்கு மாகாண சபையின் 61ஆவது அமர்வு நேற்று வியாழக்கிழமை, சபை தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் நடைபெற்றது. இதன்போது,

மேலும்...
ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல்

ஒலுவில்: வாழ்வைத் தின்னும் கடல் 0

🕔21.Jul 2016

– றிசாத் ஏ காதர் – அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் பிரதேசமானது, இலங்கையின் முக்கியமான பிரசித்தி பெற்ற இடங்களில் ஒன்றாக காணப்படுகின்றது. இதற்கு மிகமுக்கியமான காரணங்கள் பல இருந்தாலும், குறிப்பாக துறைமுக நிர்மாணத்தின் முக்கியத்துவமே இங்கு முன்னிலை பெறுவதனை காணலாம். இங்கு நிர்மாணிக்கப்பட்டுள்ள துறைமுகங்கள் இரண்டு வகையானதாக காணப்படுகின்றன. முதலாவது வர்த்தகத்

மேலும்...
கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக உதுமாலெப்பை தெரிவு 0

🕔21.Jul 2016

கிழக்கு மாகாணசபையின் எதிர்கட்சித் தலைவராக எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணசபையின் அமர்வு இன்று வியாழக்கிழமை, சபையின் தலைவர் சந்திரதாஸ கலப்பதி தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே, கிழக்கு மாகாண சபையின் எதிர்கட்சித் தலைவராக, எம்.எஸ். உதுமாலெப்பையின் பெயரை, சபைத் தலைவர் உத்தியோகபூர்வமாக அறிவித்தார். முன்னாள் அமைச்சர் அதாஉல்லாவின் தேசிய காங்கிரஸ் கட்சியின் அமைப்பாளரான உதுமாலெப்பை, ஐ.ம.சு.முன்னணியின் வெற்றிலைச்

மேலும்...
சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல் 0

🕔21.Jul 2016

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில், லங்கா சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் நலின் பெனாண்டோ இன்று வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், கோட்டே நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது, எதிர்வரும் 28ம்

மேலும்...
இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது

இலங்கை வரலாற்றில் அதிகளவான கொகேய்ன் இன்று சிக்கியது 0

🕔21.Jul 2016

இலங்கையில் இதுவரை கால வரலாற்றில், அதிகளவான கொகேய்ன் போதைப் பொருள், இன்று வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டுள்ளது. பேலியகொட களஞ்சியசாலையிலுள்ள கொள்கலனிலிருந்து சுமார் 274 கிலோ கொகேய்ன் மீட்கப்பட்டுள்ளதாக, போதைப் பொருள் தடுப்பு பிரிவு அறிவித்துள்ளது. இலங்கையில் இதுவரை மீட்கப்பட்ட, அதி கூடிய நிறையுடைய கொகேய்ன் இதுவாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தற்போது வரை சுமார் 270 கிலோ

மேலும்...
இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை

இனவாதத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்; தனிநபர் பிரேரணையை முன்வைத்து உதுமாலெப்பை உரை 0

🕔21.Jul 2016

– சலீம் றமீஸ் – நாட்டில் நிலவிய கொடிய யுத்தம் இல்லாமல் செய்யப்பட்டது போன்று, தற்போது தலை தூக்கியுள்ள இனவாதத்தையும்  இல்லாமல் செய்வதற்கு, ஜனாதிபதியும் பிரதமரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கிழக்கு மாகாணசபை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெப்பை கோரிக்கை விடுத்தார். கிழக்கு மாகாணசபையின்அமர்வு இன்று வியாழக்கிழமை தவிசாளர் சந்திரதாச கலப்பதி

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்