வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்ட நிலையில், பஷில் பிணையில் விடுதலை

🕔 May 12, 2016

Basil - 976முன்னாள் பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர் ஆஜர் செய்யப்பட்டபோது, கடுமையான நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

50 ஆயிரம் ரொக்கப் பிணையிலும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளிலும், பஷில் ராஜபக்ஷ விடுவிக்கப்பட்டதோடு, வெளிநாட்டிற்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பஷில் ராஜபக்ஷவின் கடவுச் சீட்டை நீதிமன்றில் சமர்ப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம்,  ஒவ்வொரு மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமையும் காலை 09 மணி முதல் 12 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில், நிதி குற்றப் பிரிவுக்கு சமூகமளிக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை 20 ஆம் திகதி, இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்