கிராம சேவை உத்தியோகத்தர்களாக இருந்து புலிகளாக மாறியவர்கள்; புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை

🕔 May 12, 2016

LTTE cardes - 0987புனர் வாழ்வு வழங்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் 10 உறுப்பினர்கள் அண்மையில், அவர்களின் பெற்றோர்களிடம் வவுனியாவில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர்.

மேற்படி 10 பேரில் நால்வர் கிராம சேவை உத்தியோகத்தர்களாக கடந்த காலங்களில் பணியாற்றியவர்களாவர்.

இவர்களுக்கான புனர்வாழ்வு செயற்திட்டம் வவுனியா – பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் வைத்து வழங்கப்பட்டது.

புனர்வாழ்வு நிலையத்தின் அதிகாரி கேர்னல் எம்.ஏ.ஆர். எம்டோன் தலைமையில், புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர்களை பெற்றோரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

மேலும்,  விடுதலைப் புலிகள் அமைப்பின் 29 உறுப்பினர்களுக்கு மேற்படி முகாமில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு வருகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்