கிழக்கில் தொடர்கிறது மழை

🕔 May 12, 2016

Raining - 01அம்பாறை மாவட்டம் உள்ளிட்ட கிழக்கின் அநேகமான பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது.

நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை முதல், அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கியது.

கிழக்கு மாகாணத்தில் சில காலமாக கடும் வெப்பம் நிலவி வந்தமையினால், மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டு வந்தனர்.

பாடசாலைகளும் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில் நேற்றும், இன்று வியாழக்கிழமையும் மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சில பகுதிகளில் இருண்ட காலநிலை நிலவுகிறது.

இதன் காரணமாக வெப்பம் ஓரளவு தணிந்துள்ளது.

காலை வேளைகளில் இங்கு மழை பெய்து வருகின்ற போதும், பிற்பகல் வேளைகளில் வெயிலுடனான காலநிலை நிலவுகின்றது.

கடும் வெப்பம் காரணமாக, மக்கள் பல்வேறு நோய்களினால் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, குழந்தைகள் அதிகமான நோய்களினால் பாதிப்படைந்தனர்.

அம்பாறை மாவட்டத்தில் மழை பெய்து வருகின்றபோதும், போதியளவான மழை வீழ்ச்சியாக அது அமையவில்லை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்