அம்பாறை மாவட்டத்தில் மழை; தணிகிறது கடும் வெப்பம்

🕔 May 11, 2016

Raining - 0986ம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்றும், இன்று புதன்கிழமையும் மழை பெய்து வருகிறது.

மிக நீண்ட நாட்களாக மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் பெரிதும் துன்பங்களை எதிர்கொண்டு வந்தனர்.

இதேவேளை, அதிக வெப்பம் காரணமாக கிழக்கு மாகாணப் பாடசாலைகள் 12.00 மணியுடன் கலைக்கப்பட்டு வந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

வெயில் மற்றும் அதிக வெப்பம் காரணமாக பல்வேறு நோய்களையும் மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று செவ்வாய்கிழமை மாவட்டத்தின் சில பகுதிகளில் மழை பெய்தது. இதேவேளை, இன்று அதிகாலை முதல் – மீண்டும் மழை பெய்யத் துவங்கியுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் நெற்செய்கை ஆரம்பித்துள்ள நிலையில், விவசாயிகளும் மழையினை எதிர்பார்த்திருந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்