வாக்கு மூலம் வழங்க வந்த யோசித, முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றார்

🕔 May 10, 2016

Yositha - 008
மு
ன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷ, இன்று செவ்வாய்கிழமை பொலிஸ் நிதி குற்றப் பிரிவில் வாக்கு மூலமொன்றினை வழங்கிய பின்னர், முச்சக்கர வண்டியில் திரும்பிச் சென்றார்.

சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிலையம் தொடர்பில் இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்கு மூலம் பெறுவதற்காக யோசித இன்று அழைக்கப்பட்டிருந்தார்.

நாளைய தினமும் வாக்கு மூலம் வழங்குவதற்கு பொலிஸ் நிதி குற்றப் பிரிவினர் தன்னை அழைத்துள்ளதாக, ஊடகங்களுக்கு இதன்போது யோசித தெரிவித்தார்.

ஊடகங்களிடம் பேசிய பின்னர் – அவர் முச்சக்கர வண்டியில் கிளம்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ: நன்றி – ஹிரு ரி.வி

Comments

புதிது பேஸ்புக் பக்கம்