சிறுத்தைக் குட்டி உயிருடன் மீட்பு

🕔 May 10, 2016

Leopard - 013– க.கிஷாந்தன் –

சிறுத்தைக் குட்டியொன்று – அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல் தோட்டத்திலுள்ள தேயிலை செடிகள் பயிரிடப்பட்டுள்ள மலையிலிருந்து இன்று செவ்வாய்கிழமை உயிருடன் மீட்கப்பட்டது.

தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள் இன்று காலை சிறுத்தைக் குட்டியொன்று தேயிலைச் செடிக்குள் பதுங்கி இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, தொழிலாளர்கள் அனைவரும்  இணைந்து சிறுத்தைக் குட்டியை பிடித்துள்ளனர்.

தோட்ட நிர்வாகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, மாவட்ட வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கும் அக்கரப்பத்தனை பொலிஸாருக்கும் இது தொடர்பில் தகவல் வழங்கப்பட்டது.

வன ஜீவராசிகள் திணைக்களத்தின் நுவரெலியா மாவட்ட அதிகாரிகள் குறித்த இடத்துக்கு வந்து, சிறுத்தை குட்டியை மீட்டுக் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.Leopard - 012

Comments

புதிது பேஸ்புக் பக்கம்