அமைச்சர் ஹக்கீம் – துருக்கி நாட்டு வர்த்தகக் குழுவினர் சந்திப்பு
🕔 May 10, 2016
– ஷபீக் ஹூஸைன் –
இலங்கை வந்துள்ள துருக்கி நாட்டின் வர்த்தக மன்ற தூதுக் குழுவினரை, இலங்கை – துருக்கி நாடாளுமன்ற நட்புறவு சங்கத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் இன்று செவ்வாய்கிழமை சந்தித்தனர்.
இலங்கை வர்த்தக மன்றத்தினருடனான உடன்படிக்கையை நிறைவு செய்யும் நோக்கத்துடன், துருக்கி நாட்டுத் துதுக்குழுவினர் இங்கு விஜயம் செய்துள்ளனர்.
துருக்கி நாட்டுத் துதுவர் துன்காசுஹதார் தம் நாட்டு துதுக்குழுவினருடன் வருகை தந்திருந்தார்.
தூதுக் குழுவினருக்கும், பங்குபற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அமைச்சர் ஹக்கீம் பகற்போசன விருந்துபசாரம் வழங்கி கௌரவித்ததோடு, அவர்கள் மத்தியில் உரையாற்றினார்.