பாடசாலை மைதானக் காணியை மீட்டுத் தருமாறு கோரி ஆர்ப்பாட்டம்

🕔 June 11, 2015

ஆர்ப்பாட்டம் - பாடசாலை காணி - 02– எஸ்.எம்.எம். றம்ஸான் –

பெரிய நீலாவணை விஷ்ணு மகா வித்தியாலய மைதானத்திற்குரிய காணியை மீட்டுத் தருமாறு கோரி, இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.

சில தனி நபர்களும், கழகங்களும் – பாடசாலையின் மைதானத்துக்குரிய காணியினை அடாத்தாக அபகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அபகரிக்கப்பட்ட காணியினை மீட்டுத் தருமாறு கோரியே மேற்படி ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இவ் ஆர்ப்பாட்டத்தில் பாடசாலை மாணவர்கள், பெற்றோர்கள், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

‘பெரிய நீலாவனை பிரதேசத்திலுள்ள ஒரேயொரு விளையாட்டு மைதானமென்றால், அது – விஷ்ணு மகாவித்தியாலய மைதானமாகும். எமது பிரதேசத்திலுள்ள மாணவர்களும், இளைஞர்களும் தமது விளையாட்டுத் திறமையினை வளர்த்துக் கொள்வதற்காக, இந்த மைதானத்தினைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, எங்களுடைய பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி, இம்மைதானத்துக்குரிய காணியினை மீட்டுத் தருமாறு, சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கிறோம்’ என ஆர்ப்பாட்ட்தில் கலந்து கொண்ட பெற்றோர் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில், கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலாளரிடம் ஒப்படைக்குமாறு கூறி, தமது மகஜரொன்றினை கல்முனை பொலிசாரிடம் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கையளித்தனர்.ஆர்ப்பாட்டம் - பாடசாலை காணி - 01ஆர்ப்பாட்டம் - பாடசாலை காணி - 03

Comments

புதிது பேஸ்புக் பக்கம்