தங்கத்தை கொள்ளையிட்டவர்கள், சி.சி.ரி.வி. காட்சிகளையும் கொண்டு சென்றனர்

🕔 May 5, 2016

Robbery - 08ங்கநகைப் பட்டறையில் சுமார் 5.5 கிலோகிராம் எடையுள்ள தங்க பிஸ்கட்கள் மற்றும் நகைகளை கொள்ளையிட்டுச் சென்ற துப்பாக்கிதாரிகள், சம்பவம் நடைபெற்ற போது ஒளிப்பதிவான சி.சி.ரி.வி. கமராக் காட்சிகளையும் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு, கோட்டே வீதி மிரிஹான பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த தங்க நகைப் பட்டறைக்குள் நுழைந்த நான்கு துப்பாக்கிதாரிகள், அங்கிருந்த நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்களை கொள்ளையிட்டுள்ளனர்.

இதேவேளை,  கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றபோது அங்கிருந்த சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவான காட்சிகளை, உரிமையாளரை அச்சுறுத்தி, கொள்ளையர்கள் பெற்றுச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments