கேரளாவில் வெடி விபத்து; 86 பேர் பலி, 350 பேர் காயம்

🕔 April 10, 2016

Fire - Kerala - 01ந்தியாவின் கேரளத்திலுள்ள கொல்லம் அருகிலுள்ள கோயிலில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.00 மணியளவில் இடம்பெற்ற வெடி விபத்து காரணமாக 86 பேர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, விபத்தில் சிக்கி 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கேரள மாநிலம் கொல்லம் அருகேயுள்ள பரவூர் புட்டிங்கல் தேவி  எனும் கோயிலிலுள்ள பட்டாசுக் களஞ்சியத்தில் தீப்பற்றியமை காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மேற்படி கோயிலில் நடைபெறும் திருவிழாவினை பட்டாசு வெடித்துக் கொண்டாடுவது வழக்கமாகும். தற்போது, அங்கு திருவிழா நடந்து வருகிறது.

குறித்த களஞ்சியத்திலிருந்த பட்டாசுகள் முழுமையாக தீப்பற்றியமையினாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெடி விபத்தில் ஏற்பட்ட தீயில் சிக்கி 86 பேர் உயிரிழந்தனர். 350 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைப்திலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர். காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள அரச மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வெடி விபத்தில் பக்தர்களே அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். விபத்து ஏற்பட்ட களஞ்சியத்துக்கு அருகில் இருந்த கட்டிடம் முழுமையாக பாதிப்படைந்துள்ளது.கட்டிட இடிபாடுகளில் சிக்கிமையினால் பலர் உயிரிழந்தனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்