ஓய்வு பெறும் பொலிஸ் மா அதிபருக்கு, ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை

🕔 April 8, 2016

Ilankakoon - IGP - 01பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்கக்கோன் ஓய்வு பெற்றுக் செல்லவுள்ளமையினால், அவருக்கு இன்று வெள்ளிக்கிழமை ராணுவ மரியாதையுடனான பிரியாவிடை வழங்கப்பட்டது.

இந் நிகழ்வு ராணுவத் தலைமையகத்தில் இடம்பெற்றது.

பொலிஸ் மா அதிபர் இலங்கக்கோன் எதிர்வரும் வாரத்துடன் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வுபெறுகின்றார். இதனையடுத்து, ராணுவத் தளபதி கிரிசாந்த சில்வாவுக்கும் ஓய்வுபெறும் பொலிஸ் மா அதிபருக்குமான சந்திப்பொன்று இன்று ராணுவத் தலைமையகத்தில் நடைபெற்றது.

இதன்போது, விசேட ராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பொலிஸ் மா அதிபர் வரவேற்கப்பட்டதோடு,  ராணுவத்தளபதி நினைவு சின்னமொன்றினையும் வழங்கி கௌரவித்தார்.Ilankakoon - IGP - 02

 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்