காணாமல் போனதாகக் கூறப்பட்ட மாணவி, 17 வயது கணவருடன் பொலிஸ் நிலையத்தில் சரண்
– க. கிஷாந்தன் –
காணாமல் போனதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த பதினைந்து வயது நிரம்பிய மாணவி, மூன்று மாதங்களுக்குப் பின்னர் தனது கணவருடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் நேற்று செவ்வாய்கிழமை மாலை சரணடைந்தார்.
பாடசாலை சென்று, குறிப்பிட்ட மாணவி வீடு திரும்பாததால் மாணவியின் பெற்றோர் ஊவா – பரணகமைப் பொலிஸ் நிலையத்தில் கடந்த ஜனவரி 26ந் திகதி முறைப்பாடு செய்தனர்.
இம் முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் தேடுதல்களை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில், மூன்று மாதங்களுக்குப் பின்னர் காணாமல் போனதாக குறிப்பிடப்படும் மாணவி, தனது கணவனுடன் ஊவா – பரணகம பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார்.
மேற்படி இருவரும் இள வயதுடையவர்கள் என்பதால், அவர்கள் விசாரனையின் பின்னர் வெலிமடை நீதவான் நிதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படுவார்கள் என, பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட மாணவிக்கு 15 வயது அவரது கணவனுக்கு 17 வயது என்றும் தெரியவந்துள்ளது.