கணவரைக் குத்திக் கொன்ற பெண்; பிரேத இறைச்சியை நாய்க்குக் கொடுத்த கொடுமை

🕔 April 5, 2016

Svetlana - 03னது கணவரை கொலை செய்து, அவரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை, தன்னுடைய வளர்ப்பு நாய்க்கு உண்ணக் கொடுத்த பெண் ஒருவரை, ஸ்பெயின் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ரஸ்யாவைச் சேர்ந்த சேர்ந்த ஸ்வெட்லனா (46 வயது) எனும் பெண் ஒருவரே, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த ஹான்ஸ் ஹென்கெல்ஸ் (66 வயது) எனும் தனது கணவரை இவ்வாறு கொலை செய்து, பிரேதத்தின் கைப் பகுதியிலிருந்து எடுக்கப்பட்ட இறைச்சியை நாய்க்கு உணவாக வழங்கியுள்ளார்.  இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் இவர்களுடை வசிப்பிடத்தில், இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மேற்படி இருவரும், பல ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்த நிலையில்,  02 ஆண்டுகளுக்கு முன்னர்தான் திருமணம் செய்துகொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி பெண் ஸ்வெட்லனா போதைப் பொருள் பாவனைக்கு அடியானவர் என்றும், அளவுக்கு அதிகமாக போதைப்பொருட்களை உட்கொள்வதால், மன ரீதியாக அவர்  பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிக போதையில் தனது கணவரை ஸ்வெட்லனா கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளார்.

பின்னர் இறந்துபோன கணவரின் கையிலுள்ள இறைச்சியை வெட்டி எடுத்து, மேற்படி பெண் தனது நாய்க்கு உணவாகக் கொடுத்துள்ளார்.

 

இறந்த நபரின் பிரேத அறிக்கையின் படி, அவர் பல முறை கத்தியால் குத்தப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

குறித்த பெண்ணை கைது செய்த பொலீஸார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், மனநில மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ஸ்பெயின் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.Svetlana - 04Svetlana - 01

Comments