தாங்க முடியாத வெப்பம்; நீருக்காக அலையும் யானைகள்

🕔 April 5, 2016

Elephants - 033
நா
ட்டில் வரட்சியும், வெப்பமும் நிறைந்த காலநிலை நிலவி வருகின்மையினால், மனிதர்கள் மட்டுமன்றி, விலங்குகளும் பல்வேறு அவஸ்தைகளை அனுபவித்து வருகின்றன.

அந்தவகையில், யானைகள் கூட்டமொன்று நேற்று முன்தினம் கொழும்பு – திருகோணமலை வீதியினைக் கடந்து, நீருக்காக அலைந்து திரிந்த காட்சிகளை ஊடகங்கள் பதிவு செய்துள்ளன.

சுமார் 15 யானைகள் கூட்டமாச் சேர்ந்து, இந்தப் பகுதியில் நீரைத் தேடி அலைந்தன.

இந்த நிலையில், எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மேலும் சூடான காலநிலை நிலவும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூரியன் இலங்கைக்கு நேராக உச்சம் கொடுப்பதால், இந்த வெப்பமான காலநிலை நிலவும் என்று கூறப்படுகிறது.

தற்போது, இரவு வேளைககளிலும் அதிகமான புழுக்கம் காணப்படுகின்றமையினால், மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். Elephants - 044Elephants - 055

Comments

புதிது பேஸ்புக் பக்கம்