நாசகார சம்பவத்துடன் தொடர்புடைய இருவருக்கு ஆயுள் தண்டனை

🕔 April 1, 2016

Courts order - 01– க. கிஷாந்தன் –

நாசகார செயல்களுடன் தொடர்புடைய நபர்கள் இருவருக்கு நுவெரெலியா மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

தலவாக்கலை பொலிஸ் பிரதேசத்திற்குட்பட்ட வட்டகொடை ரயில் நிலையத்தில் 2000ம் ஆண்டு பிந்துநுவெவ பிரச்சினை தொடர்பாக இடம்பெற்ற கோஷ்டி மோதல், ரயிலுக்கு தீ வைத்தல் மற்றும் நகரின் கடைகளை உடைத்தல் போன்ற நாச வேலைகளில் ஈடுப்பட்ட 12 சந்தேக நபர்களில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

சுமார் 16 வருடங்களின் பின்னர், இச்சம்பவத்தில் ஈடுப்பட்ட நபர்களுக்கு இத்தண்டனையை, நுவரெலியா மேல் நீதிமன்ற நீதவான் லலித் வழங்கினார்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்ட மேலும் 10 பேரில் மூவர் உயிரிழந்ததன் காரணமாக, மிகுதி ஏழு பேரை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக நீதவான் இதன்போது தீர்ப்பளித்தார்.

வட்டகொட பிரதேசத்தை சேர்ந்தவர்களான சிதம்பரம் வசிகரன், பென்னையா வடிவேல் நாடல் ஆகியோருக்கே இவ்வாறு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்