பஸிலுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் விளக்க மறியல்!

🕔 June 10, 2015

Basil Rajapakse - 012முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷவின் விளக்கமறியல் இம்மாதம் 18 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

கடுவெல நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை இன்று பிறப்பித்தது.

திவிநெகும திணைக்களத்தின் நிதியினை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில், முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்ஷ – கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்தமையினை அடுத்து, ஜனவரி 11 ஆம் திகதி –  நாட்டை விட்டு வெளியேறி பஸில் ராஜபக்ஷ, கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி நாடு திரும்பினார்.

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பஸில் ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆயினும், நேற்றைய தினம் அவருக்கு ஏற்பட்ட  நெஞ்சுவலி காரணமாக, இருதய சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே – பஸில் ராஜபக்ஷவை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்