தற்கொலை அங்கி மீட்பு; சந்தேக நபர் தலை மறைவு

சாவகச்சேரி – மரவன்புலோ பிரதேச வீடொன்றிலிருந்து தற்கொலை அங்கி மற்றும் கைக்குண்டுகள் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகம் தெரிவித்துள்ளது.
குறித்த வீட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, அங்கு சாவகச்சேரி பொலிஸார் சென்று சோதனையில் ஈடுபட்ட போதே, மேற்படி வெடி பொருட்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த வீட்டிலிருந்த சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இதன் அடிப்படையில், சந்தேகநபரை பொலிஸார் தேடி வருகின்றனர்.