ஜெயலலிதா ஷேட்டில், வைகோ சேலையில்: நெருப்பாகப் பரவும் படம்

🕔 March 28, 2016

Vaiko+Jayalalitha - 0143ந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரும் ஜெயலலிதாவையும், மதிமு.க. பொதுச் செயலாளர் வைகோவையும் கிண்டல் செய்யும் வகையிலான படம் ஒன்றினை, திமுக பொருளாளர் ஸ்டாலினின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதாவைப் போன்று வைகோ சேலையிலும், வைகோ போல வெள்ளை ஷேட் கருப்பு துண்டோடு ஜெயலலிதாவும் இருப்பதை போன்ற அரசியல் நையாண்டிப் படத்தை உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.

“அண்ணே.. அதாண்ணே இது” என்று, அந்தப் படத்துக்குத் தலைப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் தற்போதை அரசியல் நிலைவரத்தினை வைத்து, இந்தப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த புகைப்படம் சமூக வலைத் தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்