சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது; 05ஆவது தடவையாக இளையராஜா பெறுகிறார்

🕔 March 28, 2016

Ilayaraja - 097சிறந்த இசையமைப்பாளருக்கான இந்திய அரசின் தேசிய திரைப்பட விருதுக்காக இளையராஜாவின் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

2015 ஆம் ஆண்டுக்கான இந்திய தேசிய விருதுக்காக  இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

‘தாரை தப்பட்டை’ திரைப்படத்துக்கு இசை அமைத்தமைக்காக சிறந்த இசையமைப்பாளர் எனும் தேசிய விருது, இளையராஜாவுக்கு வழங்கப்படுகிறது.

இந்தியாவின் 63 ஆவது தேசிய திரைப்படவிருதுகள் இன்று திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.

‘அன்னக்கிளி’ திரைப்படத்துக்கு இசையமைத்ததன் மூலம், 1976 ஆம் ஆண்டு ஓர் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.

‘தாரை தப்பட்டை’ அவர் இசையமைத்த 1000 ஆவது படமாகும்.

இளையராஜா ஏற்கனவே 04 தடவை சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1985இல் – சாகர சங்கமம் (தெலுங்கு), 1987இல் – சிந்து பைரவி (தமிழ்), 1989இல் – ருத்ர வீணை (தெலுங்கு) மற்றும் 2009இல் – பழஸிராஜா (மலையாளம்) ஆகிய திரைப்படங்களுக்கு இசையமைத்தமைக்காக இளையராஜா தேசிய விருதினைப் பெற்றிருந்தார்.

1943 ஆம் ஆண்டில் பிறந்த இளையராஜா, தனது 73 ஆவது வயதில் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுக் கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்