அக்கரைப்பற்றில் ‘மக்கள் பேரணி’: 30 ஆம் திகதி ஏற்பாடு

🕔 March 27, 2016

6666
– முன்ஸிப் –

‘காணாமல் போகச் செய்தலை காணாமல் போகச் செய்வோம், ஜெனீவா வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொள்வோம்’ எனும் தொனிப் பொருளிலான மக்கள் பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி அக்கரைப்பற்று நகர மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

காணாமல் போனோரின் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ள பேரணி, எதிர்வரும் 30 ஆம் திகதி பிற்பகல் 01 மணி முதல் 04 மணிவரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மங்கள சமரவீர, மனோ கணேசன், பிரதியமைச்சர் அனோமா கமகே, ஹாபிஸ் நசீர் அஹமட் மற்றும் எதிர்கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரா. சம்பந்தன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.

இதேவேளை, இப் பேரணி தொடர்பான பிரசார நடவடிக்கைகள் கடந்த வியாழக்கிழமை அம்பாறை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இடம்பெற்றது.

காணாமல் போனோரின் உறவினர்கள் இப் பேரணி பற்றிய பிரசுரங்களை மக்களுக்கு விநியோகித்ததோடு, சுவரொட்டி பிரசாரத்திலும் ஈடுபட்டிருந்தனர்.555
444

Comments

புதிது பேஸ்புக் பக்கம்