ஜிஹாத் குழுக்கள் இலங்கையில் இல்லை: சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவிப்பு

🕔 March 26, 2016
Armed group - 097லங்கையில் இஸ்லாமிய ஜிஹாத் குழுக்கள் இல்லை என்று, இலங்கையை மையமாகக் கொண்ட சர்வதேச இனத்துவ கற்கை நிலையம் தெரிவித்துள்ளது.

இலங்கை முஸ்லிம் சமூகத்தில் ஜிஹாத் குழுக்கள் இயங்குவதாக, அண்மைக் காலங்களில் கூறப்பட்டு வந்த முறைப்பாடுகளின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் முடிவிலேயே இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.

குறிப்பாக 37 வீதமான முஸ்லிம்கள் வரையில் வாழும் கிழக்கு மாகாணத்தில் ஜிஹாத் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அந்த குற்றச்சாட்டுகள் தெரிவித்திருந்தன.

2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட புள்ளி விபரங்களின் அடிப்படையில், நாட்டின் மொத்த சனத்தொகையில் 9.67 வீதமானோர் முஸ்லிம்களாவர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்