மின் நிலைய வெடிப்புச் சம்பவங்கள் குறித்து ஆராய, ஜேர்மன் நிபுணர்கள் வருகை

கொட்டுகொட உபமின் நிலையம் மற்றும் பியகம மின் விநியோக நிலையம் ஆகியவற்றில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவங்கள் குறித்து, இவர்கள் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதேவேளை, அண்மையில் ஏற்பட்ட மின் தடையை அடுத்து, அனல் மின் நிலையங்களை புதுப்பிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட இரு மின்நிலையங்களுக்கும் தற்போது பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், உப மின் நிலையங்கள் காணப்படும் இடங்கள் மற்றும் அவற்றுக்குத் தேவையான பாதுகாப்பு தொடர்பான தகவல்கள் அடங்கிய ஆவணமொன்று, பாதுகாப்பு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளது எனவும் மின்சக்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதிலும் 55 உப மின் நிலையங்கள் காணப்படுகின்றன.