பசுவுடன் பாலியல் உறவு; கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

🕔 March 21, 2016

Calf - 01சுமாடு ஒன்றுடன் பாலியல் உறவு புரிய முயற்சித்த நபர் ஒருவரை கைது செய்யும் பொருட்டு, கம்பஹா பொலிஸார் தேடுதல் நடத்தி வருகின்றனர்.

கொண்டயா என்று அழைக்கப்படும் துனேஷ் பிரியசந்த எனும் நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற கடற்படை உத்தியோகத்தர் ஒருவர், பசு மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். கடந்த சனிக்கிழமை இரவு 10 மணியளவில், வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த மாடு பயத்துடன் கத்த ஆரம்பித்தது. இதனையடுத்து, பசுவின் உரிமையாளர் வெளியில் வந்து ‘டோச்’ அடித்துப் பார்த்த போது, பசுவின் அருகில் நிர்வாணமாக நின்றிருந்த கொண்டயா, ஓட்டமெடுத்துள்ளார்.

இது குறித்து பசுவின் உரிமையாளரான ஓய்வுபெற்ற கடற்படை உத்தியோகத்தர், கம்பஹா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் – அந்த இடத்தில் காற்சற்டை, ரி ஷேட் உள்ளிட்ட ஆடைகளைக் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த நபர், பசுவுடன் பாலியல் உறவு கொள்ள முயற்சித்துள்ளார் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அவரை கைது செய்வதற்காகத் தேடி வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்