மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியல் வெளியீடு; சோமாலியாவை விடவும், கீழ் நிலையில் இலங்கை

🕔 March 18, 2016

Happiest people - 01லகின் மகிழ்ச்சியான நாடுகளின் பட்டியலில் இலங்கை 117 ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆயினும், கடந்த முறையை விடவும் இலங்கை 17 இடங்களைத் தாண்டி முன்னேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா.வின் ‘சஸ்டெய்னபிள் டெவலப்மென்ட் சொலூஷன்ஸ் நெட்வொர்க்’ அமைப்பு மகிழ்ச்சிகரமான உலக நாடுகள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

இதற்காக 158 நாடுகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி ஒரு நாட்டின் தனிநபர் வருமானம், ஆரோக்கியம், ஆயுட்காலம், சமூக ஆதரவு மற்றும் சுதந்திரம் போன்ற மகிழ்ச்சிக்கான விஷயங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் டென்மார்க் – உலகிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாடாக, மேற்படி பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு சுவிட்சர்லாந்து பட்டியலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது.

இம்முறை வெளியிடப்பட்ட பட்டியலில் டென்மார்க்கை அடுத்து 02ஆவது இடத்தில் சுவிட்சர்லாந்து உள்ளது. ஐஸ்லாந்து, நோர்வே, பின்லாந்து ஆகிய நாடுகள் முறையே 3, 4, 5-வது இடத்தில் உள்ளன.

இதில் இந்தியா 118ஆவது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இந்தியா 117 ஆவது இடத்தில் இருந்தது.

வறுமையில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சோமாலியா, இந்தப் பட்டியில் 76 ஆவது இடத்தில் உள்ளது.

இந்தப்பட்டியலில் சீனா – 83, பாகிஸ்தான் – 92, ஈரான் – 105, பாலஸ்தீனம் – 108, வங்கதேசம் – 110ஆவது இடங்களைப் பிடித்துள்ளன.

இதில் அமெரிக்கா 13ஆவது இடத்தில் உள்ளது.  ஆஸ்திரேலியா 09ஆவது இடத்திலும், இஸ்ரேல் 11ஆவது இடத்திலும் உள்ளன.

மார்ச் 20ஆம் திகதி உலக மகிழ்ச்சி தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்