ராஜித நாடு திரும்பினார்

🕔 March 18, 2016

Rajitha - 011சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று வியாழக்கிழமை இரவு நாடு திரும்பினார்.

சிங்கப்பூர் மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டமையினை அடுத்து, அவர் அங்கிருந்து நாடு வந்தடைந்தார்.

நெஞ்சு வலி காரணமாக பெப்ரவரி 19ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில், சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து, மறுநாள் அவர் சிங்கப்பூர் வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு அமைச்சருக்கு சத்திர சிகிச்சையொன்று மேற்கொள்ளப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்