அ.இ.ம.காங்கிரஸ் சார்பாக வகித்த பதவிகளிலிருந்து சிராஸ் ராஜிநாமா; ஜெமீலுடனான முரண்பாடு காரணம் என்கிறார்

🕔 March 17, 2016

Ziras - 001– இக்பால். எம். பிஹாம் –

ல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயர் சிராஸ் மீராசாஹிப் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பிரதித் தேசிய அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜிநாமாச் செய்துள்ளார்.

இதேவேளை, கைத்தொழில் வர்த்தக அமைச்சில் – தான் வகித்து வந்த நிபுணத்துவ ஆலோசகர் பதவிலிருந்தும் சிராஸ் விலகியுள்ளார்.

இதுதொடர்பில் சிராஸ் மீராசாஹிப் தெரிவிக்கையில்;

“அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பிரதித் தலைவர் ஏ.எம்ஜெமீலுக்கும் எனக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டினையடுத்தே மேற்படி முடிவினை எடுக்கத் தீர்மாணித்தேன்.

குறிப்பாக, அம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியை வளர்ப்பதற்கும்,
அக்கட்சியின் வெற்றிக்காகவும் இரவு பகலாக உழைத்தவன் நான் என்பதனை யாவரும் அறிவர்.

இருந்தாலும் இந்தக்கட்சியின் வளர்ச்சிக்காகவும், வெற்றிக்காகவும் எந்தப் பங்களிப்புக்களையும் செய்யாமலும், கடந்த பொதுத் தேர்தலின் போது கட்சித் தலைவரிடத்தில் பல லட்சம் ரூபா பணத்தைப் பெற்றுக்கொண்டு, ஹோட்டல்களில் பதுங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நடித்துக்
கொண்டிருந்தவர்களுக்குமே கட்சி முக்கியத்துவம் கொடுத்துவருகிறது.

மேலும், கட்சியின் வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கும் கட்சியை வளர்ப்பதற்கும் பல சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது. கட்சியைப் பற்றி சிந்திக்காத குறுகிய எண்ணம் கொண்டவர்களே அதற்குக் காரணமாக உள்ளனர்.

குறிப்பாக இக்கட்சியிலுள்ள சிலர் தனக்குத்தான் அதிகாரம் வேண்டும் என்றும், தானே அம்பாறை மாவட்டத்தில் கட்சி நடவடிக்கைகளை கையாள வேண்டும் என்றும், குறுகிய
எண்ணத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரசின் கோட்டையாக இருக்கின்ற அம்பாறை மாவட்டத்தில் இவ்வாறு குறுகிய உள்ளம் கொண்ட சிலரால் மாத்திரம் கட்சியை வளர்த்துக்கொள்ள முடியாது.

எனவே, ஒரே கட்சியை சேர்ந்த இருவர் அம்பாறை மாவட்டத்தில் முரண்பட்டுக் கொண்டு கட்சிப் பணிகளில் ஈடுபட முடியாது. இதுவிடயமாக கட்சியின் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் பல முறை முறையிட்டும் எந்தவிதமான தீர்வுகளும் எட்டப்படவில்லை.

உண்மையாகச் சொல்லப் போனால், கட்சிக்குள்ளே இருந்து கொண்டு சண்டையிட்டுக் கொண்டும் மண்டியிட்டுக் கொண்டும் கட்சிப் பணிகளில் என்னால் ஈடுபட முடியாது. இதனால்தான் அனைத்துப் பதவிகளிருந்தும் கௌரவமாக விலகுவதற்குத் தீர்மாணித்தேன்.

எனது முடிவினை எழுத்து மூலமாக கட்சியின் தலைவருக்கும், செயலாளருக்கும் அனுப்பி வைத்துள்ளேன்” என்றார்.Ziras - 0111Ziras - 0222

Comments

புதிது பேஸ்புக் பக்கம்