தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு

🕔 March 16, 2016

Maulala - 02– அஷ்ரப் ஏ. சமத் –

தெஹிவளை கவ்டான வீதியில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.

ஹுசைன் மெளலானா (63 வயது) என்பவரும், அவரின் மனைவி, (வயது 55) மகள் (வயது 14) மற்றும் சகோதரியின் மகள் (வயது 14)  ஆகியோர் மௌலானாவின் 03 மாடி வீட்டின், கீழ்பகுதியில் சடலாமாக இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டனர்.

மௌலானாவின் வாகன சாரதி, இன்று காலை வீட்டுக்கு வந்து அழைத்தபோது – வீட்டினை யாரும் திறக்கவில்லை. இதனால், அயலவர்களை அழைத்த சாரதி, வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு பார்த்தபோது அனைவரும் சடலமாகக் காணப்பட்டனர்.

மௌலானா கதிரையில் சாய்ந்திருந்தவாறும், அவரது மகள்  மற்றும் மருமகள் முன் மண்டபத்திலும், மனைவி படுக்கையறையிலும் இறந்தவாறு காணப்பட்டுள்ளளனர்.

இதனையடுத்து அங்கு விரைந்த தெஹிவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொள்ள ஆரம்பித்தனர். இதேவேளை, குற்றத்தடுப்புப் பிரிவினர் மற்றும் மின்சார பரிசோதகர்களும் விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவ இடத்துக்கு வருகை தந்து சடலங்களைப் பார்வையிட்ட கல்கிசை நீதவான் நீதிமன்ற நீதிபதி திருமதி ரணசிங்க,சடலங்களை பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு உத்தரவிட்டார்.

இறந்தவர்களின் உடற் பாகங்கள் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக அனுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், குறித்த வீடு – பொலிஸாரால் சீல்  வைக்கப்பட்டுள்ளது.

இறந்தவர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் அலிசாஹிர் மௌலானாவின் உறவினர்களாவர்.

Maulala - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்