நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

🕔 March 16, 2016

Nishantha ranathunga - 087நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார்.

பணச் சலவை மோடியில் கைது செய்யப்பட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தின் அதிகாரி நிஷாந்த ரணதுங்க, கடந்த ஜனவரி 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் பிணை மனு, இன்று புதன்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, பிணைச் சட்டத்தின் பிரகாரம் – அவருக்கு பிணை வழங்க முடியாது என்று நீதிபதி மொராயஸ் தெரிவித்தார்.

மேலும், பிணை தொடர்பான முடிவினை கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

இதேவேளை, நிஷாந்த ரணதுங்கவை பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் விளக்கமறியலில் வைக்க முடியாது என்று  குறிப்பிட்ட நீதிபதி, இம்மனு தொடர்பான தீர்மானத்தை கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்றும் கூறினார்.

எவ்வாறாயிலும், நிஷாந்த ரணதுங்கவுடன் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த யோசித ராஜபக்ஷவும், மேலும் மூவரும் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்