ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

🕔 March 14, 2016

President - 008நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு முழுவதும் ஒரே நேரத்தில் மின்சாரத் தடை, அடிக்கடி ஏற்பட்டு வருகின்றமையினை கருத்திற்கோண்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றிரவு நாடு முழுவதும் பல மணி நேரம் மின்சாரத் தடை ஏற்பட்டு, பின்னர் நிலைமை வழமைக்குத் திரும்பியது. இந்த நிலையில், இன்று காலை நாடு முழுவதும் மின்சாரத் தடை ஏற்பட்டு பல மணி நேரங்களின் பின்னர் மின்சார விநியோகம் வழங்கப்பட்டது.

இதேவேளை, நாடு முழுவதும் மின்சாரம் தடைப்படுவதன் பின்னணியில் சூழ்ச்சிகள் எவையும் உள்ளனவா என்கிற ரீதியிலும் சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்