மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி எல்லாவெல இன்று திங்கட்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.
சுகயீனமுற்ற நிலையில், கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் மரணமடைந்தார்.
இறக்கும் போது அவருக்கு 75 வயது.
நரம்பு சம்பந்தமான நோயினால் பாதிக்கப்பட்டிருந்த இவர், சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.



