தம்மாலோக தேரர், தலா 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பு

🕔 March 11, 2016

Uduve Thammaloga thero - 0873விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர், இன்று வெள்ளிக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார்.

யானைக் குட்டியொன்றினை சட்டவிரோதமாக தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டில் நேற்று முன்தினம் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் ஆஜர்செய்யப்பட்டார்.

இந்த நிலையில், தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில், தம்மாலோக தேரரை பிணையில் விடுவிக்குமாறு கோரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவினை கவனத்திற் கொண்ட நீதிமன்றம், தேரரை ஒவ்வொன்றும் 60 லட்சம் ரூபாய் பெறுமதியான 03 சரீரப் பிணையில் விடுவிப்பதற்கு அனுமதித்தது.

தொடர்பான செய்தி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்