ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில், கோட்டா ஆஜர்
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஆஜரானார்.
ரக்னா லங்கா நிறுவனம் தொடர்பில் வாக்கு மூலம் ஒன்றினைப் பெற்றுக் கொள்வதற்காகவே, இவர் அழைக்கப்பட்டுள்ளார்.
இன்று காலை 8.45 மணிக்கு ஆணைக்குழுவுக்கு வருகை தந்திருந்த அவரிடம் வாக்கு மூலம் பெறும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.