எரிந்த வேனுக்குள் ஐந்து சடலங்கள்; 119 மூலம் பொலிஸாருக்கு தகவல்

🕔 March 11, 2016
Van - 097ரியுண்ட நிலையில் ஐந்து சடலங்கள் வேன் ஒன்றுக்குள் சிலாபம் தங்ககொட்டுவ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று காலை இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கொட்டுவ கொஸ்ஹேனவத்த என்ற இடத்தில், எரியுண்ட நிலையில் நின்ற வேன் ஒன்றுக்குள் இருந்தே இந்த சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

ஆயினும், சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை

எரிந்த நிலையில் காணப்படும் குறித்த வேன், கொள்ளுபிட்டி பகுதியைச் சேர்ந்த ஒருவரின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கமான 119 மூலம், குறித்த சம்பவம் பற்றி பொலிஸாருக்கு தகவல் கிடைத்திருந்தது.

இதேவேளை, சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு அருகில், இரத்தக்கறை இருந்தமை கண்டறியப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்