குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்கை முடிவுறுத்த துமிந்த சில்வா ஆர்வம்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா, தனக்கு எதிராகத் தொடரப்பட்டுள்ள மூன்று வழக்குகளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, குறித்த வழங்குகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆர்வமாக உள்ளதாக அவரின் சட்டத்தரணி மூலம் நீதிமன்றுக்குத் தெரியப்படுத்தி உள்ளார்.
துமிந்த சில்வா அவரின் சொத்து விபரங்களை 2011, 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் வெளிப்படுத்தத் தவறிருந்தார் எனத் தெரிவித்து, லஞ்ச ஊழல் ஆணைக்குழு, இவருக்கு எதிராக மூன்று வழக்குகளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தது.
இந்த நிலையில், துமிந்த சில்வா தனக்கெதிரான மூன்று வழக்குளிலும் குற்றத்தை ஒப்புக் கொண்டு, வழக்குகளை முடித்துக் கொள்வதற்கு ஆர்வமான உள்ளார் என்று, அவரின் சட்டத்தரணி அர்ஜுன பிரேமரத்ன மூலமான கொழும்பு பிரத நீதவான் ஜிஹான் பில்பிட்டியவுக்கு தெரிவித்திருந்தார்.
ஆயினும், குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஏப்ரல் 18 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.