முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருக்கு விளக்க மறியல்

🕔 March 9, 2016

Uduve Thammaloga thero - 0873முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.

விலங்குகள் மற்றும் தாவரங்கள் சட்டத்தின் கீழ், அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தம்வசம் வைத்திருந்ததாக இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்தின் படி, யானைகள் பொதுச் சொத்துக்களாகக் கருதப்படுகின்றன.

தொடர்பான செய்தி: முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

Comments

புதிது பேஸ்புக் பக்கம்