கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் 08 ஆவது பட்டமளிப்பு விழா ஆரம்பம்

🕔 March 6, 2016

Convocation - 04
– எம்.எப். றிபாஸ் –

ட்டாளைச்சேனையில் அமைந்துள்ள கிழக்கிலங்கை அரபு கல்லுாரியின் 08ஆவது பட்டமளிப்பு விழா, அட்டாளைச்சேனை கல்வியற் கல்லுாரி மண்டபத்தில் இன்று காலை ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது

கல்­லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் தலைமையில் நடைபெறும் இவ் விழால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் பிரதம அதிதியாகவும், ஐக்கிய அரபு ராஜியம் மற்றும் குவைத் நாடுகளின் துாதுவர்களான அப்துல் ஹமீட் காசீம் அல் முல்லா மற்றும் கலாப் எம்.எம்.வூ தாஹிர் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டுள்ளனர்.

முன்னதாக, அதிதிகள் கலாசார நிகழ்வுகளுடன் வரவேற்கப்பட்டு, மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

நிகழ்வில், பிரதம அதிதி அமைச்சர் ரஊப் ஹக்கீம் மற்றும் சிறப்பு அதிதிகளாகக் கலந்து கொண்ட  ஐக்கிய அரபு ராஜியம், குவைத் நாடுகளின் துாதுவர்களுக்கு, பேராசிரியர் அச்சி எம். இஸ்ஹாக் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.

ஷர்க்­கியா என அழைக்கப்படும் கிழக்­கி­லங்கை அரபுக் கல்­லூ­ரியின் அறு­பதாவது ஆண்டு நிறைவான வைர­விழாவும் இந்தப் பட்டமளிப்பு விழாவுடன் இணைந்து கொண்டாடப்படுகின்றது.Convocation - 02Convocation - 03Convocation - 01

Comments

புதிது பேஸ்புக் பக்கம்