அமைச்சர் ஹக்கீம் தலைமையில், பாலமுனை பிரதேச அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல்
🕔 March 3, 2016



– ஜெம்சாத் இக்பால் –
அட்டாளைச்சேனைப் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாலமுனை பிரதேசத்தை அபிவிருத்தி செய்யும் முகமாக, அம்பாறை மாவட்டத்திலுள்ள அரச நிறுவனங்களின் உயரதிகாரிகளுடனான கலந்துரையாலொன்று இன்று விழாயக்கிழமை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரஊப் ஹக்கீம் தலைமையில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரின் அட்டாளைச்சேனை அலுவலகத்தில் இடம்பெற்றது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபை, தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை, சுகாதாரத் திணைக்களம், இலங்கை மின்சாரசபை, பிரதேச செயலகம், பிரதேச சபை மற்றும் பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் பங்கு கொண்டனர்.ஸ
பாலமுனைப் பிரதேசத்தில் காபட் வீதிகளை அமைப்பது தொடர்பில் இதன்போது அமைச்சர் ஹக்கீம் கூடிய கவனம் செலுத்தியதோடு, அது தொடர்பான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளைப் பணித்தார்.
இச்சந்திப்பில் விளையாட்டுத்துறைப் பிரதியமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எல். தவம், கே.எம். ஜவாத், அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான ரஹ்மத் மன்சூர், யூ.எல்.எம்.என். முபீன், அக்கரைப்பற்று மாநகரசபையின் முன்னாள் எதிர்க்கட்சித்தலைவர் எஸ்.எல்.எம். ஹனீபா மதனி, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ. அன்சில், மு.காங்கிரசின் ஸ்தாபகசெயலாளர் சட்டத்தரணி எஸ்.எம்.ஏ. கபூர், அட்டாளைச்சேனை ஆயுள்வேத ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் கே.எல்.எம். நக்பர் மற்றும் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் நஸ்ருல் கரீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Comments



