எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

🕔 March 1, 2016

SB. Disanayaka - 086.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே, அமைச்சர் திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளார்.

1951 ஆம் ஆண்டு பிறந்த எஸ்.பி. திஸாநாயக்க, 1977 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இலங்கை கொமியுனிஸ்ற் கட்சி மூலம் போட்டியிட்டதன் மூலம் அரசியலுக்குள் நுழைந்தார். ஆயினும் அந்தத் தேர்தலில் அவரால் வெற்றிபெற முடியவில்லை.

பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்து கொண்ட எஸ்.பி. திஸாநாயக்க, 1989 ஆம் ஆண்டு நாடாளுமன்றம் சென்றார்.

1994 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கவின் ஆட்சியின் கீழ் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகப் பதவி வகித்திருந்த திஸாநாயக்க, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராகவும் பணியாற்றினார். ஆயினும் 2001 ஆம் ஆண்டு, ஐ.தே.கட்சியின் இணைந்து கொண்டார்.

நீதிமன்ற அவமதித்புக் குற்றச்சாட்டில் 2004 ஆம் ஆண்டு முதல் 2006 ஆம் ஆண்டு வரை சிறை வாசம் அனுபவித்த அவர், மீண்டும் சுதந்திரக் கட்சியில் இணைந்து அப்போதை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில் அமைச்சரானார்.

மஹிந்த ராஜபக்ஷவின் விசுவாசிகளில் ஒருவராக அறியப்பட்ட எஸ்.பி. திஸாநாயக்க, மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாதன் பின்னர், புதிய ஆட்சியில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்