யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

🕔 March 1, 2016

Yositha - 976யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யோசித மற்றும் ஏனைய நபர்கள் சார்பில் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் மா அதிபர், நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உள்ளிட்ட 12 பேர், இந்த மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

சீ.எஸ்.என். நிறுவனம் சார்பாக பணச் சலவையில் ஈடுபட்டனர் என்கிற குற்றச்சாட்டில், யோசித உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்