தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

🕔 March 1, 2016

Wazeem Thajudeen - 098க்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது செய்யப்படவுள்ளார் என்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாஜுதீனின் மரணம், ஒரு கொலையாக இருக்கக் கூடும் என நீதிமன்றம் உறுதிப்படுத்திய பின்னர், மேற்படி சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி இவ்வாறு நடந்து கொண்டுள்ளார் எனக் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள், ராணுவத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் மற்றும் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் உள்ளிட்டவர்களிடம், இந்த கொலை தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments