கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை அறிவித்துள்ளது.
பொலிஸ் நிதி மோசடிப் புலனாய்வுப் பிரிவின் வேண்டுகோளுக்கு இணங்கவே, பாதுகாப்பு அமைச்சு இந்த உத்தரவினை விடுத்துள்ளது.
கடற்படை ஊடகப் பேச்சாளர் அக்ரம் அலவி இது குறித்துத் தெரிவிக்கையில்;
யோசித ராஜபக்ஷவின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் அனைத்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், கடற்படை தலைமையகத்தின் உத்தரவின்றி எந்தவொரு கடற்படை முகாமுக்குள்ளும், யோசித ராஜபக்ஷ நுளைவதற்கு அனுமதிக்கப்பட மாட்டார்” என்றார்.
சீ.எஸ்.என். தொலைக்காட்சி நிறுவனத்தின் ஊடாக பணச்சலவை மற்றும் அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டுக்களின் கீழ் யோசித ராஜபக்ஷ கடந்த மாதம் 30ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் குறித்த வழக்கின் விசாரணைகளை தடையின்றி மேற்கொள்வதற்காகவே யோசிதவை கடற்படையிலிருந்து இடைநிறுத்துமாறு பொலிஸ் நிதிமோசடிப் பிரிவு வேண்டுகோள் விடுத்தது.