அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் பிளவு; புதிய அமைப்பு உதயம்

🕔 February 28, 2016

Journalists’ Forum - 01
– அக்தர், ஏ.எல்.எம். ஸினாஸ், எம்.எஸ்.எம். றம்ஸான் –

ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகளில் அதிருப்தியடைந்த சிரேஸ்ட ஊடகவியலாளர்கள் உட்பட பலர் இணைந்து, புதிய அமைப்பொன்றினை உருவாக்கியுள்ளனர்.

நிந்தவூர் அல் – மஸ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஒன்று கூடி 28 ஊடவியலாளர்கள் புதிய அமைப்பினை ஆரம்பித்தனர்.

அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரியின் முன்னாள் விரிவுரையாளரும், முன்னாள் ஊடகவியலாளருமான கலாபூசணம் எம்.ஐ.எம். முஸ்தபா தலைமையில் இந் நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது, இதில் கலந்து கொண்ட ஊடகவியலாளர்கள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் நடவடிக்கைகள் வெளிப்படை தன்மையற்றதாகவும், அதன் தலைவர் தன்னிச்சையாகச் செயற்பட்டுக் கொண்டிருப்பதாகவும் இதன்போது பலரும் கூறினர்.

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனமானது ஊடகவியலாளர்களின் நலன்களில் அக்கறையற்றதொரு அமைப்பாக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. ஆயினும், அவ்வமைப்பை ஒழுங்குபடுத்துவதற்கு பல முயற்சிகள் எடுக்கப்பட்ட போதும் அதனை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் தலைவருக்கும், அவரைச் சார்ந்தவர்களுக்கும் இருக்கவில்லை. தலைவருக்கு விருப்பமற்ற கேள்விகளைக் கேட்கின்றவர்கள் சம்மேளனத்தின் கூட்டங்களுக்கு திட்டமிட்டு அழைக்கப்படுவதில்லை. ஒரு சிலரை கைக்குள் வைத்துக் கொண்டு, சம்மேளனத்தின் தலைவர் தாம் நினைத்தைச் செய்து கொண்டிருக்கின்றார் என்று இதன்போது கருத்துரைத்தவர்கள் கூறினர்.

எனவே, நாம் தனி அமைப்பாக செயற்படுவதுதான் சிறந்தது எனவும் ஊடவியலாளர்கள் இதன்போது வலியுறுத்தினர்.

இதனைத் தொடர்ந்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் பேரவை (Amparai District Journalists’ Forum) என்ற பெயரில் அமைப்பினை உருவாக்கி இயங்குவதென்று இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

இதற்கமைவாக பின்வருவோர் அமைப்பின் பொறுப்புகளுக்கு தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் கலாபூசணம் எம்.ஏ. பகுர்தீன்
செயலாளர்: சிரேஸ்ட ஊடகவியலாளர் எம். சஹாப்தீன்
பொருளாளர்: யூ.எல்.மப்றூக்
அமைப்பாளர்: யூ.எல்.எம். றியாஸ்
பிரதித் தலைவர்கள்: எஸ்.எல்.எம். பிக்கீர் மற்றும் எம்.எஸ்.எம்.ஏ. மலீக்
உபசெயலாளர்: வி. சுகிர்தகுமார்
கணக்காய்வாளர்: ஏ.பி.எம். அஸ்ஹர்

நிர்வாகக் குழு உறுப்பினர்கள்:

ஏ.எல்.எம்.சினாஸ் (மருதமுனை), எஸ்.எல்.எம்.றம்ஸான் (கல்முனை), றியாத் ஏ மஜீத் (சாய்ந்தமருது), ஏ. அஸ்ஹர் (மாளிகைக்காடு), எம்.ஐ.ஏ. கபூர் (நிந்தவூர்), எம்.எஸ்.எம். ஹனீபா (ஒலுவில்), பீ. முஹாஜிரீன் (பாலமுனை), எம்.எப். றிபாஸ் (அட்டாளைச்சேனை), என்.எம்.எம். புவாத் (சம்மாந்துறை), யூ.கே. காலிதீன்.Journalists’ Forum - 05Journalists’ Forum - 10Journalists’ Forum - 04Journalists’ Forum - 08Journalists’ Forum - 09Journalists’ Forum - 11Journalists’ Forum - 12Journalists’ Forum - 13Journalists’ Forum - 14Journalists’ Forum - 15Journalists’ Forum - 07Journalists’ Forum - 06

Comments

புதிது பேஸ்புக் பக்கம்