மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன்

🕔 February 28, 2016

Swaminathan - 0965ந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்து ஆலயங்களில் மிருகங்கள் பலியிடுவதைத் தடுத்தல் என்று, குறித்த சட்ட மூலத்துக்குப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

சட்ட வரைஞர் திணைக்களத்தில், இந்த சட்ட மூலம் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்;

“மேற்படி சட்டத்தைக் கொண்டு வருவதற்கான அமைச்சரவை அங்கீகாரம், இந்த வாரத்துக்குள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளது.

கோவில்களில் குறிப்பாக சிலாபம் முன்னேஸ்வரத்திலுள்ள பத்திரகாளியம்மன் ஆலயத்தில் மிருகங்கள் பலியிடப்படுவதைத் தடுக்குமாறு, விலங்குகளின் உரிமைகளுக்காகப் போராடும் ஏராளமான அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்