ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்

🕔 February 27, 2016

Maithiri - 012னாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார்

அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன் விசாரிக்கும் பொருட்டு, ஜனாதிபதி இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.

இதய நோய் காரணமாக இலங்கையிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் கடந்த வாரம் அனுமதிக்கப்பட்டிருந்த அமைச்சர் ராஜித, அறுவை சிசிக்சையொன்றினை மேற்கொள்ளும் பொருட்டு, மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை ஜனாபதியாக்குவதில் ராஜித சேனாரத்ன மிகவும் அர்ப்பணிப்போடு, தீவிரமாக இயங்கிய ஒருவர் என்பதோடு, ஜனாதிபதி மைத்திரிக்கு மிகவும் நெருக்கமான அரசியல்வாதியுமாவார்.

இதனாலேயே, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகுவதற்கு முன்னர் வகித்த சுகாதார அமைச்சுப் பதவியினை, தனது ஆட்சியில் ராஜிதவுக்கு வழங்கினார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்